நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3364
Zoom In NormalZoom Out


பயிற்றக் காவிரிநாட்
டோவாத வோத்தி னொலி’’

இஃது ஓதுவித்தல்.

‘‘எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு’’
              (குறள்.424)

இஃது ஓதுவித்தற் சிறப்பு.

‘‘நன்றாய்ந்த நீணிமிர்சடை
முதுமுதல்வன் வாய்போகா
தொன்றுபுரிந்த வீரிரண்டி
னாறுணர்ந்த வொருமுதுநா
லிகல்கண்டோர் மிகல்சாய்மார்
மெய்யன்ன பொய்யுணர்ந்து
பொய்யோராது மெய்கொளீஇ
மூவேழ் துறையு முட்டின்று போகிய
வுரைசால் சிறப்பி னுரவோர் மருக
வினைக்குவேண்டி நீபூண்ட
புலப்புல்வாய்க் கலைப்பச்சைக்
சுவற்பூண்ஞாண் மிசைப்பொலிய
மறங்கடிந்த வருங்கற்பின்
அறம்புகழ்ந்த வலைசூடிச்
சிறுநுதற்பே ரகலல்குற்
சிலசொல்லிற் பலகூந்த
னினக்கொத்தநின் றுணைத்துணைவியர்
தமக்கமைந்த தொழில்கேட்பக்
காடென்றா நாடென்றாங்
கீரேழி னிடமுட்டா அது
நீர்நாண நெய்வழங்கியு
மெண்ணாணப் பலவேட்டும்
மண்ணாணப் புகழ்பரப்பியும்
அருங்கடிப் பெருங்காலை
விருந்துற்றநின் றிருந்தேந்துநிலை
யென்றுங், காண்கதில் லம்ம யாமே குடாஅது
பொன்படு நெடுவரைப் புயலேறு சிலைப்பிற்
பூவிரி புதுநீர்க் காவிரி புரக்குந்
தண்புனற் படப்பை யெம்மூ ராங்க
ணுண்டும் தின்று மூர்ந்து மாடுகஞ்
செல்வ லத்தை யானே செல்லாது
மழையண் ணாப்ப நீடிய நெடுவரைக்
கழைவள ரிமயம் போல
நிலீஇய ரத்தைநீ நிலமிசை யானே’’
         (புறம்.166)

இதனுள் வேட்டவாறும் ஈந்தவாறுங் காண்க.

‘‘ஈன்ற வுலகளிப்ப வேதிலரைக் காட்டாது
வாங்கியதா யொத்தானம் மாதவத்தோ - னீந்த
மழுவா ணெடியோன் வயக்கஞ்சால் வென்றி
வழுவாமற் காட்டிய வாறு.’’

இது பரசுராமனைக் காசிபன் வேட்பித்த பாட்டு.

‘‘நளிகட  லிருங்குட்டத்து’’   என்னும்  (26)   புறப்பாட்டினுள்,
அந்தணன் வேட்பித்தலும் அரசன்