கஞ்செய்வார்க்கு
உரியனவுமென இருவகையவென்று கொள்க. அவற்றுள்
தவஞ்செய்வார்க்கு உரியன.
ஊணசையின்மை, நீர்நசையின்மை, வெப்பம்
பொறுத்தல், தட்பம் பொறுத்தல்,
இடம் வரையறுத்தல், ஆசனம் வரையறுத்தல்,
இடையிட்டு மொழிதல், வாய்வாளாமை என
எட்டும். இவற்றிற்கு, உணவினும் நீரினுஞ் சென்ற மனத்தைத்
தடுத்தலும், ஐந்தீநாப்பணும் நீர்நிலையினும்
நிற்றலுங், கடலுங் காடும் மலையும்
முதலியவற்றில் நிற்றலுந், தாமரையும் ஆம்பலும்
யாமையும் முதலிய ஆசனத்திருத்தலும்,
உண்டற்காலை உரையாடாமையுந்,
துறந்தக்காற்றொட்டும்
வாய்வாளாமையும் பொருளென்றுணர்க. இனி
யோகஞ்செய்வார்க்குரியன. இயமம் நியமம்
ஆசனம் வளிநிலை தொகைநிலை
பொறைநிலை நினைதல் சமாதி என்னும் எட்டும்
ஆம். இவற்றை, ‘‘பொய்கொலை களவே காமம் பொருணசை யிவ்வகை யைந்து மடக்கிய தியமம்.’’ ‘‘பெற்றதற் குவத்தல் பிழம்புநனி வெறுத்தல் கற்பன கற்றல் கழிகடுந் தூய்மை பூசனைப் பெரும்பய மாசாற் களித்தலொடு நயனுடை மரபி னியம மைந்தே’’ ‘‘நிற்ற லிருத்தல் கிடத்தல் நடத்தலென் றொத்த நான்கி னொல்கா நிலைமையோ டின்பம் பயக்குஞ் சமமே முதலிய வந்தமில் சிறப்பி னாசன மாகும்’’ ‘‘உந்தியொடு புணர்ந்த விருவகை வளியுந் ‘தந்த மியக்கந் தடுப்பது வளிநிலை’’ ‘‘பொறியுணர் வெல்லாம் புலத்தின் வழாம லொருவழிப் படுப்பது தொகைநிலை யாமே’’ ‘‘மனத்தினை யொருவழி நிறுப்பது பொறைநிலை’’ ‘‘நிறுத்திய வம்மன நிலைதிரி யாமற் குறித்த பொருளொடு கொளுத்த னினைவே’’ ‘‘ஆங்கனம் குறித்த வாய்முதற் பொருளொடு தான்பிற னாகாத் தகையது சமாதி’’ என்னும்
உரைச்சூத்திரங்களா னுணர்க. ‘பக்க’மென்றதனான்,
முட்டின்றி முடிப்போர்
முயல்வோர் என்பனவும், ‘‘நீர்பலகான் மூழ்கி நிலத்தசைஇத் தோலுடையாச் சோர்சடை தாழச் சுடரோம்பி - யூரடையார் கானகத்த கொண்டு கடவுள் விருந்தோம்பல் வானகத் துய்க்கு
|