|
இது மேல் தொகுத்துக்
கூறிய எழுவகைத் திணையுள் அடங்காத வற்றிற்கு
முற்கூறிய துறைகளே போலத் தொடர்
நிலைப்படுத்தாது மறத்திற்கு ஒன்பதும்
அறத்திற்கு ஒன்பதுமாக இருவகைப்படுத்துத் துறை கூறுகின்றது. (இ-ள்.)
கூதிர் வேனில் என்று இரு பாசறைக் காதலின் ஒன்றிக் கண்ணிய மரபினும் -
கூதிரெனவும் வேனிலெனவும் பெயர்பெற்ற இருவகைப்
பாசறைக்கண்ணுங் காதலால் திரிவில்லாத
மனத்தனாகி ஆண்டு நிகழ்த்தும் போர்த்தொழில் கருதிய
மரபானும்; கூதிர்,
வேனில் ஆகுபெயர். அக்காலங்களிற்
சென்றிருக்கும் பாசறையாவது தண்மைக்கும் வெம்மைக்குந் தலைமைபெற்ற காலத்துப் போகத்திற் பற்றற்று வேற்றுப்புலத்துப் போந்திருத்தல்.
இக் காலங்களிற் பிரிதல் வன்மையின் இது வென்றியாயிற்று. தலைவி மேற் காதலின்றிப் போரின்மேற் காதலின்
சேற
|