நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3386
Zoom In NormalZoom Out


ற்றுப் படூஉ நெறியுமா ரதுவே’’             (புறம்.195)

இது   வீடேதுவாக   வன்றி  வீடுபேற்று   நெறிக்கட்   செல்லும்
நெறியேதுவாகக் கூறியது.

‘‘இருங்கடலுடுத்த’’ என்னும் (369) புறப்பாட்டும் அது.

கழிந்தோர்     ஒழிந்தோர்க்குக்    காட்டிய    முதுமையும்   -
இளமைத்தன்மை  கழிந்து  அறிவுமிக்கோர் இளமை கழியாத அறிவில்
மாக்கட்குக் காட்டிய முதுகாஞ்சியானும்;

முதுமை   மூப்பாதலான்  அது   காட்சிப்பொருளாக    இளமை
நிலையாமை கூறிற்றாம்.

உ-ம்:

‘‘இனிநினைந் திரக்க மாகின்று திணிமணற்
செய்வுறு பாவைக்குக் கொய்பூத் தைஇத்
தண்கய மாடு மகளிரொடு கைபிணைந்து
தழுவுவழித் தழீஇத் தூங்குவழித் தூங்கி
மறையென லறியா மாயமி லாயமொ
டுயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்த
நீர்நணிப் படுகோ டேறிச் சீர்மிகக்
கரையவர் மருளத் திரையகம் பிதிர
நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து
குளித்து மணற் கொண்ட கல்லா விளமை
யளிதோ தானே யாண்டுண்டு கொல்லோ
தொடித்தலை விழுத்தண் டூன்றி நடுக்குற்
றிருமிடை மிடைந்த சிலசொற்
பெருமூ தாளரே மாகிய வெமக்கே’’
        (புறம்.243)

இது வீடு பெறுதற்கு வழி கூறியது.

பண்புற     வரூஉம்  பகுதி    நோக்கிப்  புண்கிழித்து  முடியும்
மறத்தினானும்   -   நன்றாகிய  குணம்  உறுநிலையாகப்  பெறுகின்ற
பகுதியை  யாராய்ந்து  பெறுதற்குப்  பட்ட விழுப்புண் தீர்ந்து வாழும்
வாழ்க்கை நிலையின்மையின் அதனை வேண்டாது புண்ணைக் கிழித்து
இறக்கும் மறக்காஞ்சியானும்;

இது யாக்கை  நிலையின்மையை நோக்கிப் புகழ்பெறுதல் குறித்தது.
இதனை    வாகைத்திணைப்   பின்னர்   வைத்தார்;   இக்காஞ்சியும்
வாகையொடு மயங்கியுங் காஞ்சியாதல் பற்றி.

உ-ம்:

’’பொருது வடுப்பட்ட யாக்கை நாணிக்
கொன்று முகந்தேய்ந்த வெஃகந் தாங்கிச்
சென்று களம்புக்க தானை தன்னொடு
முன்மலைந்து மடிந்த வோடா விடலை
நடுக னெடுநிலை நோக்கி யாங்குத்தன்
புண்வாய் கிழித்தனன் புகழோ னந்நிலைச்
சென்றுழிச் செல்க மாதோ வெண்குடை
யரசுமலைந்து தாங்கிய களிறுமடி பறந்தலை
முரண்கெழு தெவ்