வர்
காண விவன்போ லிந்நிலை பெறுகயா னெனவே’’ இது
போர் முடிந்த பின் களம்புக்கு நடுகல் ஆயினானைக் கண்டு உடம்பினது நிலையின்மையினையும் பண்புற வருதலையும்
நோக்கி இறந்தமை கூறலிற் காஞ்சியாயிற்று. ஏமச்
சுற்றம் இன்றிப் புண்ணோற் பேஎய்
ஓம்பிய பேஎய்ப் பக்கமும் - கங்குல் யாமத்துக் காத்தற்குரிய சுற்றக்குழாமின்மையின் அருகு
வந்து புண்பட்டோனைப் பேய்தானே
காத்த பேய்க் காஞ்சியானும்; பேய்
காத்ததென்றலின் ஏமம் இரவில்
யாமமாயிற்று. ஏமம் காப்புமாம்.
ஓம்புதலாவது அவனுயிர் போந்துணையும் ஓரியும்
நரியுங் கிடந்தவன் தசையைக் கோடலஞ்சிப்
பாதுகாத்தலாம். இது
சுற்றத்தாரின்மை கூறலிற் செல்வ நிலையாமையாயிற்று.
‘பக்க’மென்றதனாற பெண்டிர் போலவார் காத்தலும் பேயோம்பாத பக்கமுங் கொள்க. உ-ம்: ‘‘புண்ணனந்த ருற்றானைப் போற்றுந ரின்மையிற் கண்ணனந்த ரில்லாப்பேய் காத்தனவே - யுண்ணு முளையோரி யுட்க வுணர்வொடு சாயாத விளையோன் கிடந்த விடத்து’’ என வரும். ஏனைய
வந்துழிக் காண்க. இன்னன்
என்று இரங்கிய மன்னையானும் - ஒருவன் இறந்துழி அவன்
இத்தன்மையோனென்று ஏனையோர் இரங்கிய
கழிவு பொருட்கண் வந்த மன்னைக் காஞ்சியானும்; இது
பலவற்றின் நிலையாமை கூறி
இரங்குதலின் மன்னைக் காஞ்சியென வேறு
பெயர் கொடுத்தார். இது பெரும்பான்மை மன் என்னும் இடைச்சொற்
பற்றியே வருமென்றற்கு ‘மன்’ கூறினார். இது மன்னையெனத்
திரிந்து காஞ்சியென்பதனோடடுத்து நின்றது.
இஃது உடம்பொடு புணர்த்தல். ‘‘சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே பெரியகட் பெறினே யாம்பாடத் தான்மகிழ்ந் துண்ணு மன்னே சிறுசோற் றானும் நனிபல கலத்தன் மன்னே பெருஞ்சோற் றானும் நனிபல கலத்தன் மன்னே யென்பொடு தடிபடு வழியெல்லா மெ
|