றந்தபால் சீர்சிறந்த வான்பொருள் வட்டத் தயிராகு மத்தயிர் மெல்லக் கடைவிடத்து நெய்தோன்ற நெய்பயந்து நல்லமு தன்ன வளையாகு நல்ல புனிதமு மெச்சிலு நீக்கித் துனியின்றி யன்ன பெரும்பயத்த வாகலாற் றொன்மரபிற் காரார் புறவிற் கலித்த புதர்மாந்தி யாவா ழியரோ நெடிது’’ ஏனைய வந்துழிக் காண்க. ‘‘புயல்சூடி நிவந்த பொற்கோட் டிமயத்து வியலறைத் தவிசின் வேங்கை வீற்றிருந்தாங் கரிமான் பீடத் தரசுதொழ விருந்து பெருநிலச் செல்வியொடு திருவீழ் மார்பம் புதல்வருந் தாமு மிகலின்று பெறூஉந் துகளில் கற்பின் மகளிரொடு விளங்கி முழுமதிக் குடையி னமுதுபொதி நீழ லெழுபொழில் வளர்க்கும் புகழ்சால் வளவன் பிறந்தது பார்த்துப் பிறர்வாய் பரவநின் அறங்கெழு சேவடி காப்ப உறந்தையோ டூழி யூழி வாழி யாழி மாநில மாழியிற் புரந்தே’’ இது கடவுளை வாழ்த்தி ஒழியாது தனக்குப்
பயன்படுவோன் ஒருவனையுங் கூட்டி வாழ்த்துதலின் புரைதீர்காமம் புல்லிய வகையாயிற்று.
(26) ஒன்றன்பகுதியுள்
மக்கட்பகுதி தோன்றுமாறு
|