நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3402
Zoom In NormalZoom Out


க்கிளைக்குப்     புறனாயிற்று.    முன்னோர்    கூறிய    குறிப்பும்
பாடப்படுவோன்கண்       வேட்கையின்மையிற்     கைக்கிளையாம்.
குறிப்பென்றார்,  அறம்பொருள் இன்பம் பயப்பச்  செய்த செய்யுளைக்
கேட்டோர்க்கும்   அஃது   உறுதிபயத்தலைக்  குறித்துச்  செய்தலின்.
செந்துறையாவது,  விகாரவகையான்  அமரராக்கிச் செய்யும் அறுமுறை
வாழ்த்தினைப்  போலாது  உலகினுள்  இயற்கை  வகையான்  இயன்ற
மக்களைப் பாடுதல். இது செந்துறைப் பாடாண் பாட்டெனப்படும்.

‘‘வண்ணமுந்   துணையும்   பொரீஇ   யெண்ணா’’  (பத்துப்.
குறிஞ்சிப்.31)   என்பவாகலானும்,  ஐவகை   நிறத்தினையும்  வண்ண
மென்பவாகலானும்,  வண்ணமென்பது  இயற்சொல்;  வருண மென்பது
வடமொழித் திரிபு.

‘ஆங்கு     வண்ணப்பகுதி வரைவின்’றெனவே  வருகின்ற காமப்
பகுதியிடத்து   வண்ணப்பகுதி   வரையப்படுமாயிற்று;   கைக்கிளைக்
கிழத்தியை    உயர்ந்தோன்    வருணத்துப்    படுத்துக்   கூறாதது,
‘அனைநிலை’ (தொல்.புறத்திணை20)  வருணத்துப்படுத்துத் தோன்றக்
கூறலின்.

உ-ம்:

‘‘நிலநீர் வளிவிசும் பென்ற நான்கி
னளப்பரி யையே
நாள்கோள் திங்கள் ஞாயிறு கனையழ
லைந்தொருங்கு புணர்ந்த விளக்கத் தனையை
போர்தலை மிகுத்த வீரைம் பதின்மரொடு
துப்புத்துறை போகிய துணிவுடை யாண்மை
யக்குர னனைய கைவண் மையையே
அமர்கடந்து மலைந்த தும்பைப் பகைவர்
போர்பீ டழித்த செருப்புகன் முன்ப
கூற்றுவெகுண்டு வரினு மாற்றுமாற் றலையே
யெழுமுடி கெழீஇய திருஞெம ரகலத்து
நோன்புரி தடக்கைச் சான்றோர் மெய்ம்மறை
வானுறை மகளிர் நலனிகல் கொள்ளும்
வயங்கிழை கரந்த வண்டுபடு கதுப்பின்
ஒடுங்கீ ரோதிக் கொடுங்குழை கணவ
பல்களிற்றுத் தொகுதியொடு வெல்கொடி நுடங்கும்
படையே ருழவ பாடினி வேந்தே
யிலங்குமணி மிடைந்த பொலங்கலத் திகிரிக்
கடலக வரைப்பினிப் பொழின்முழு தாண்டநின்
முன்றிணை முதல்வர் போல நின்றுநீ
கெடாஅ நல்லிசை நிலைஇத்
தவாஅ லியரோவிவ் வுலகமோ டுடனே’’
    (பதிற்றுப்.14)

பரவற்கண் வந்த செந்துறை