இது முற்கூறிய
கடவுட்கும் மக்கட்கும் எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது. (இ-ள்.) காமப்பகுதி - முன்னர்ப் ‘புரைதீர் காம’ (தொல். புறம். 26) மென்றதனுட் பக்குநின்ற புணர்ச்சி வேட்கை; கடவுள் பாங்கினும் வரையார் - கட்புலனாகிய கடவுளிடத்தும் நீக்கார்; ஏனோர் பாங்கினும் வரையார் என்மனார் புலவர் - மக்களிடத்தும் நீக்காரென்று கூறுவர் புலவர் எ-று. பகுதி
ஆகுபெயர். அது கடவுண்மாட்டுக் கடவுட்பெண்டிர் நயப்பனவும், அவர்மாட்டு மானிடப்பெண்டிர் நயப்பனவுங், கடவுண் மானிடப்பெண்டிரை நயப்பனவும் பிறவுமாம். இன்னும் ‘பகுதி’
யென்றதனானே எழுதிணைக்குரிய காமமுங் ‘காமஞ்சாலா
இளமையோள்வயிற்’ (தொல். அகம். 50) காமமுமன்றி இது வேறொரு காமமென்று கொள்க. உ-ம்: ‘‘நல்கெனி னாமிசையா ணோமென்னுஞ் சேவடிமே லொல்கெனி னுச்சியா ணோமென்னு - மல்கிரு ளாட லமர்ந்தாற் கரிதா லுமையாளை யூடலுணர்த்துவதோ ராறு’’
(புற. வெ. பாடாண்.48) ‘‘பல்லேற்ற பரிகலத்துப் பலியேற்றன் மேலிட்டு வல்லேற்ற முலைமகளிர்
மனமேற்ப
|