நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3405
Zoom In NormalZoom Out


வருதிரால்
வல்லேற்ற முலைமகளிர் மனமேற்ப நீரேறுங்
கொல்லேற்றுக் கறுகிடினுங் கொள்ளுமோ கொள்ளாதோ’’

‘‘குடுமிப் பருவத்தே கோதை புனைந்தே
யிடுமுத்தம் பூத னிருப்பப்- படுமுத்தம்
புன்னை யரும்பும் புகாஅர்ப் புறம்பணையார்க்
கென்ன முறைய ளிவள்’’

என வரும்.

‘‘களியானைத் தென்னன் கனவின்வந் தென்னை
யளியா னளிப்பானே போன்றான் - றெளியாதே
செங்காந்தண் மெல்லிரலாற் சேக்கை தடவந்தே
னென்காண்பே னென்னலால் யான்’’
      (முத்தொள்.63)

‘‘அணியாய செம்பழுக்காய் வெள்ளிலையோ டேந்திப்
பணியாயே யெம்பெருமா னென்று - கணியார்வாய்க்
கோணலங் கேட்பதூஉங் கொண்கர் பெருமானார்
தோணலஞ் சேர்தற் பொருட்டு’’

என வரும்.

‘‘அடிபுனை தொடுகழன் மையணற் காளைக்கென்
தொடிகழித் திடுதல்யான் யாயஞ் சுவலே
யடுதோண்முயங்க லவைநா ணுவலே
யென்போற் பெருவிதுப் புறுக வென்று
மொருபாற் படாஅ தாகி
யிருபாற் பட்டவிம் மைய லூரே’’
             (புறம்.83)

இது  பெருங்கோழி நாய்கன் மகள் ஒருத்தி ஒத்த அன்பினாற் காம
முறாதவழியுங்   குணச்சிறப்பின்றித்   தானே   காமமுற்றுக்  கூறியது,
இதனானடக்குக.

இன்னும்   ‘ஏனோர் பாங்கினும்’  என்பதனானே  கிளவித்தலைவ
னல்லாத பாட்டுடைத்தலைவனைக் கிளவித் தலைவனாகக் கூறுவனவுங்
கொள்க.

உ-ம்:

‘‘கார்முற்றி யிணரூழ்த்த கமழ்தோட்ட மலர்வேய்ந்து
சீர்முற்றிப் புலவர்வாய்ச் சிறப்பெய்தி யிருநிலந்
தார்முற்றி யதுபோலத் தகைபூத்த வையைதன்
நீர்முற்றி மதில்பொரூஉம் பகையல்லா னேராதார்
போர்முற்றொன் றறியாத புரிசைசூழ் புனலூரன்’’

                                        (கலி.67)

இது  குறிப்பினாற் பாட்டுடைத்தலைவனைக் கிளவித் தலைவனாகக்
கூறியது.

‘‘மீளிவேற் றானையர் புகுதந்தார்
நீளுயர்கூட னெடுங்கொடி யெழவே’’
           (கலி.31)

என்பதும் அது.

இவ்வாறு வருவனவெல்லாம் இதனான் அமைக்க.            (28)

மக்கள் குழவிக்கண்ணும் புரைதீர்காமம் உரித்தாதல
 

84.குழவி மருங்கினுங் கிழவ தாகும்.
 

இது  முன்னிற்சூத்திரத்திற் பக்குநின்ற  காமத்திற்கன்றிப்  ‘புரைதீர்
காம’
த் (தொல். புறம். 26) திற்குப் புறனடை கூறுகின்றது.

(இ-ள்.) குழவிமருங்கினும் கிழ