நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3411
Zoom In NormalZoom Out


கும் பொதுவாய் நிற்றலின் இடையே வைத்தார்.

இனி   அமரரென்னும் ஆண்பாற்    சொல்லுள்       அடங்காத
பெண்பாற்றெய்வமும்     வள்ளியென்னுங்    கடவுள்   வாழ்த்தினுட்
படுவனவாயின,   பாடா   ணெனப்படா  வாயினுமென்பது;  என்னை?
ஞாயிறு  நெருப்பின்றன்மையும்    ஆண்டன்மையும்  உடைமையானுந்,
திங்கள் நீரின்றன்மையும்   பெண்டன்மையும் உடைமையானு மென்பது.
அல்லதூஉம்,  வெண்கதிர்  அமிர்தந் தேவர்க்கு வழங்கலானும் வள்ளி
யென்பதூஉமாம் என்பது.

உ-ம்:

‘‘மேகத்தான் வெற்பா னிமையான் விழுப்பனியா
னாகத்தா னீமறைய நாட்கதிரே - யோகத்தாற்
காணாதார் நின்னை நிலையாமை கட்டுரைப்பர்
நாணாத கண்ணெனக்கு நல்கு’’

இது கொடிநிலை வாழ்த்து.

‘‘சார்பினாற் றோன்றாது தானருவா யெப்பொருட்குஞ்
சார்பெனநின் றெஞ்ஞான்று மின்பந் தகைத்தரோ
வாய்மொழியான் மெய்யான் மனத்தா னறிவிறந்த
தூய்மையதா மைதீர் சுடர்’’

இது கந்தழி வாழ்த்து.

‘‘பிறைகாணுங் காலைத்தன் பேருருவ மெல்லாங்
குறைகாணா தியாங்கண்டு கொண்டு - மறைகாணா
தேய்ந்து வளர்ந்து பிறந்திறந்து செல்லுமென்
றாய்ந்தது நன்மாயை யாம்’’

இது வள்ளி வாழ்த்து.

‘‘தனிக்கணிற் பாகமுந் தானாளு மாமை
பனிக்கண்ணி சாவு படுத்துப் - பனிக்கணந்
தாமுறையா நிற்குமத் தண்மதிக்குத் தாயிலளென்
றியாமுரையா நிற்கு மிடத்து’’

இது வள்ளிப்பாற்பட்ட பெண்பாற் கடவுள்வாழ்த்து.             (33)

எய்தாதது எய்துவித்தல்
 

89.  கொற்ற வள்ளை யோரிடத் தான.
 

இஃது எய்தாதது எய்துவித்தது;  தேவர்க்கும்  உரியவாம்  ஒரு சார்
அப்பாடாண்டிணைக் கொற்றவள்ளை யென்றலின்.

(இ-ள்.)   கொற்றவள்ளை - அதிகாரத்தாற் கைக்கிளைக்குப் புறனாய்
வெட்சி  முதல்  வஞ்சி யீறாகிய பாடாண் கொற்றவள்ளை;  ஓரிடத்தான
-மேற்கூறி  நின்ற  தேவர்  பகுதிக்கண்ணதன்றி  அவரின்   வேறாகிய
மக்கட் பகுதிக்கண்ணது எ-று.

எனவே, உழிஞை முதலிய பாடாண் கொற்றவள்ளை நற்கிளைஞருங்
கூளிச்சுற்றமும்   ஒன்றனை நச்சிப் புகழாதே வாளா கூறுதலும், ஈண்டுக்
கூறுகின்ற   கொற்றவள்ளை  புலவன் ஒன்றனை நச்சி வெட்சி முதலிய
ஏழனானும்    புகழ்ந்துரைத்தலுமாயிற்   றாதலிற்   ‘படையியங்கரவம்’
(தொல்.புறம்.3)   முதலாக வஞ்சியிற் ‘குன்றாச் சிறப்பிற் கொற்றவள்ளை’
யீறாகக்   கிடந்த   பொருட்   பகுதியெல்லாம்  பாடாண்டிணையாகப்
பாடுங்கால்  மக்கட்கே  யுரிய  என்பதூஉம், உழிஞை முதலியவற்றைப்
பாடாண்டிணையாகப் பாடுங்கால் அவை மக்