இது
முன்னிற் சூத்திரத்து அதிகாரப்பட்டு
நின்ற மக்கட் பாடாண்டிணைக் குரிய துறை
கூறுகின்றது. (இ-ள்.)
கொடுப்போர் ஏத்திக் கொடாஅர்ப் பழித்தலும் -
பிறர்க்கு ஈவோரைப் பிறரி னுயர்த்துக்
கூறிப் பிறர்க் கீயாதாரை இழித்துக் கூறலும்; சான்றோர்க்குப்
பிறரை யிழித்துக் கூறற்கண்ணது தக்க தன்றேனும் நன்மக்கள்
பயன்பட வாழ்தலுந் தீயோர் பயன்படாமல் வாழ்தலுங் கூறக்கேட்டு ஏனையோரும் பயன்பட வாழ்தலை விரும்புவரென்பது பயப்பக் கூறலின் இவர்க்கு இங்ஙனங் கூறுதல் தக்கதாயிற்று. இதனை ஏத்தலும் பழித்தலும் ஏத்திப் பழித்தலுமென மூவகையாகக் கொள்க. உ-ம்: ‘‘தடவுநிலைப் பலவி னாஞ்சிற் பொருநன் மடவன் மன்ற செந்நாப் புலவீர் வளைக்கை விறலியர் படப்பைப் கொய்த அடகின் கண்ணுறை யாக யாஞ்சில அரிசி வேண்டினே மாகத் தான்பிற வரிசை யறிதலிற் றன்னுந் தூக்கி யிருங்கடறு வளைஇய குன்றத் தன்னதோர் பெருங்களிறு நல்கி யோனே யன்னதோர் தேற்றா வீகையு முளதுகொல் போற்றா ரம்ம பெரியோர்தங் கடனே’’
(புறம்.140) இது கொடுப்போர்
ஏத்தியது. ‘‘பாரி பாரி யென்றுபல வேத்தி யொருவற் புகழ்வர் செந்நாப் புலவர் பாரி யொருவனு மல்லன் மாரியு முண்டீண் டுலகுபுரப் பதுவே’’
(புறம்.107) என்பதுவும் அது. ‘‘ஒல்லுவ தொல்லு மென்றலு மியாவர்க்கு மொல்லா தில்லென மறுத்தலு மிரண்டு மாள்வினை மருங்கிற் கேண்மைப் பாலே யொல்லா தொல்லு மென்றலு மொல்லுவ தில்லென மறுத்தலு மிரண்டும் வல்லே யிரப்போர் வாட்ட லன்றியும் புரப்போர் புகழ்குறை படூஉம் வாயி லத்தை யனைத்தா கியரினி யிதுவே யெனைத்துஞ் சேய்த்துக் காணாது கண்டன மதனால் நோயில ராகநின் புதல்வர் யானும் வெயிலென முனியேன் பனியென மடியேன் கல்குயின் றன்னவென் னல்கூர் வளிமறை நா
|