ணல தில்லாக் கற்பின் வாணுதன் மெல்லியற் குறுமக ளுள்ளிச் செல்வ லத்தை சிறக்கநின் னாளே’’
(புறம்.196) ‘‘புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை யிகழ்வாரை நோவ தெவன்’’
(குறள்.237) இவை கொடாஅர்ப்
பழித்தல் ‘‘களங்கனி யன்ன கருங்கோட்டுச் சீறியாழ்ப் பாடின் பனுவற் பாண ருய்த்தெனக் களிறில வாகிய புல்லரை நெடுவெளிற் கான மஞ்ஞை கணனொடு சேப்ப வீகை யரிய விழையணி மகளிரொடு சாயின் றென்ப வாஅய் கோயில் சுவைக்கினி தாகிய குய்யுடை யடிசில் பிறர்க்கீ வின்றித் தம்வயி றருத்தி யுரைசா லோங்குபுக ழொரீஇய முரசுகெழு செல்வர் நகர்போ லாதே’’
(புறம்.127) இஃது ஆயைப்
புகழ்ந்து ஏனைச் செல்வரைப் பழித்தது. ‘‘மின்னுந் தமனியமும் வெற்றிரும்பு மொன்றாகிப் பொன்னின் பெயர்படைத்தாற் போலாதே கொன்னே யொளிப்பாரு மக்களா யொல்லுவ தாங்கே யளிப்பாரு மக்களா மாறு’’
(பெரும்பொருள்
விளக்கம்.புறத்திரட்டு 228) இதுவும் அது. அடுத்து
ஊர்ந்து ஏத்திய இயன்மொழி வாழ்த்தும் - தலைவனெதிர் சென்று ஏறி அவன் செய்தியையும் அவன்
குலத்தோர் செய்தியையும் அவன்மேலே ஏற்றிப் புகழ்ந்த இயன்மொழி வாழ்த்தும்; என்றது,
இக்குடிப்பிறந்தோர்க்கெல்லாம்
இக்குணங்கள் இயல்பென்றும், அவற்றை நீயும் இயல்பாக
உடையை யென்றும், அன்னோர் போல எமக்கு நீயும் இயல்பாக ஈ
யென்றும் உயர்ந்தோர் கூறி அவனை
வாழ்த்துதலின் இயன்மொழி வாழ்த்தாயிற்று.
இதனை உம்மைத்தொகையாக்கி இயன்மொழியும்
வாழ்த்துமென இரண்டாக்கிக் கொள்க. இஃது
ஒருவர் செய்தியாகிய இயல்பு கூறலானும்
வண்ணப் பகுதியின்மையானும் பரவலின்
வேறாயிற்று. உ-ம்: ‘‘மாசற விசித்த வார்புறு வள்பின் மைபடு மருங்குல் பொலிய மஞ்ஞை யொலிநெடும் பீலி யொண்பொறி மணித்தார் பொலங்குழை யுழிஞையொடு பொலியச் சூட்டிக் குருதி வேட்கை யுருகெழு முரசம் மண்ணி வாரா வளவை யெண்ணெய் நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை யறியா தேறிய வென்னைத் தெறுவர இருபாற்
படுக்கு
|