நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3421
Zoom In NormalZoom Out


ங்குபுகழ்ப் பேகன்
ஒல்லென வொலிக்குந் தேரொடு
முல்லை வேலி நல்லூ ரானே’’
             (புறம். 144)

இது  கண்ணகி காரணமாக  வையாவிக்கோப்  பெரும்  பேகனைப்
பரணர் பாடிய கைக்கிளை வகைப் பாடாண்பாட்டு.

‘கிளையை       மன்னெங்   கேள்வெய்   யோற்கென’   வினவ,
‘யாங்கிளையல்லேம்  முல்லை  வேலி  நல்லூர்க்கண்ணே  வருமென்று
சொல்வாரெனக்   கூறுதலின்,   அ ஃது   ஏனைக்   கைக்கிளைகளின்
வேறாயிற்று.

‘கன்முழை யருவி’ என்னும் (147) புறப்பாட்டும் அது.

தொக்க     நான்கும் உள என மொழிப - அந்நான்கும் முற்கூறிய
ஆறனோடே  தொக்குப்  பத்தாய்ப் பாடாண்பகுதிக்கண்ணே உளவாய்
வருமென்று கூறுவர் ஆசிரியர் எ-று.

‘தொக்க     நான்’  கென்றதனான்   இந்நான்கும்   வெண்பாவும்
ஆசிரியமுந் தொக்குநின்ற மருட்பாவானும் வருமென்பதூஉங்  கொள்க.
இவற்றை   மேல்   வருகின்றவற்றோடு  உடன்கூறாராயினார்,  அவை
இழிந்தோர் கூறுங் கூற்றாகலின்.                            (35)

இதுவுமது
 

91.  தாவி னல்லிசை கருதிய கிடந்தோர்க்குச்
சூத ரேத்திய துயிலெடை நிலையுங்
கூத்தரும் பாணரும் பொருநரும் விறவியும்
ஆற்றிடைக் காட்சி யுறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீஇச்
சென்றுபய னெதிரச் சொன்ன பக்கமுஞ்
சிறந்த நாளணி செற்ற நீக்கிப்
பிறந்த நாள்வயிற் பெருமங் கலமுஞ்
சிறந்த சீர்த்தி மண்ணுமங் கலமும்
நடைமிகுத் தேத்திய குடைநிழன் மரபும்
மாணார்ச் சுட்டிய வாண்மங் கலமும்
மன்னெயி லழித்த மண் ணுமங் கலமும்
பரிசில் கடைஇய கடைக்கூட்டு நிலையும்
பெற்ற பின்னரும் பெருவள னேத்தி
நடைவயிற் றோன்று மிருவகை விடையும்
அச்சமு முவகையு மெச்ச மின்றி
நாளும் புள்ளும் பிறவற்றி னிமித்தமுங்
காலங் கண்ணிய வோம்படை யுளப்பட
ஞாலத்து வரூஉ நடக்கையது குறிப்பிற்
கால மூன்றொடு கண்ணிய வருமே.
 

இதுவும் அது.

(இ-ள்)  தாவில் கிடந்தோர்க்கு நல்லிசை கருதிய  சூதர்   ஏத்திய
துயிலெடை   நிலையும்   -   தமது  வலியாலே  பாசறைக்கண்  ஒரு
மனக்கவற்சியின்றித் துயின்ற அரசர்க்கு நல்ல புகழைக்  கொடுத்தலைக்
கருதிய சூதர் அத்துயிலெடுப்பின் ஏத்தின துயிலெடை நிலையும்;

‘கிடந்தோர்க்’