ங்களைப் போற்றுதுங் கொங்கலர்
தார்ச்சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ் வங்கணுலகளித்த லான்’’
(சிலப். மங்கல. 1) எனவும், ‘‘திங்கண் மாலை வெண்குடையான் சென்னி செங்கோ
லதுவோச்சிக் கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி’’
(சிலப். கானல்வரி) ‘‘ஞாயிறு போற்றுது ஞாயிறு போற்றுதும் காவிரி நாடன் திகிரிபோற் பொற்கோட்டு மேரு வலந்திரித லான்’’
(சிலப். மங்கல) எனவும்
இவை குடையையும் செங்கோலையுங்
திகிரியையும் புனைந்தன. மாணார்ச்
சுட்டிய வாண்மங்கலமும் - பகைவரைக் குறித்த வாள் வென்றியாற் பசிப்பிணி தீர்ந்த
பேய்ச்சுற்றமும் பிறரும் வாளினை வாழ்த்தும் வாண்மங்கலமும்; இது பிறர்
வாழ்த்தப்படுதலிற் கொற்றவையைப் பரவும் ‘வென்றவாளின்
மண்’ (புறம்.68) என்பதனின் வேறாயிற்று. புகழ்ச்சிக்கட்
பகைவரை இகழ்ந்து புகழ்தலின் ‘மாணார்ச் சுட்டிய’ என்றார். உ-ம்: ‘‘ஆளி மதுகை யடல்வெய்யோன் வாள்பாடிக் கூளிகள் வம்மினோ கூத்தாடக் - காளிக்குத் தீராத வெம்பசி தீர்த்துநாஞ் செங்குருதி நீராட்டி யுண்ட நிணம்’’ என வரும். ‘‘அரும்பவிழ்தார்க் கோதை யரசெறிந்த வொள்வாள் பெரும்புலவுஞ் செஞ்சாந்தும் நாறிச் - சுரும்பொடு வண்டாடும் பக்கமு முண்டு குறுநரி யுண்டாடும் பக்கமு முண்டு’’
(முத்தொள்.38) இது பிறர்
கூறியது. இது
பரணியிற் பயின்றுவரும். மன்னெயில்
அழித்த மண்ணு மங்கலமும் - மாற்றரசன்
வாழ்ந்த மதிலையழித்துக் கழுதையேரான்
உழுது வெள்ளைவரகுங் கொள்ளும் வித்தி மங்கலமல்லாதன
செய்தவன் மங்கலமாக நீராடு மங்கலமும்; அழித்ததனான்
மண்ணுமங்கலம். உ-ம்: ‘‘கடுந்தேர் குழித்த ஞெள்ள லாங்கண் வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டிப் பாழ்செய் தனையவர் நனந்தலை நல்லெயில்’’
(புறம்.15) என எயிலழித்தவாறு கூறி, ‘‘வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி யூப நட்ட’’
(புறம்.15, 20 -1) எனவே, ஒருவாற்றான்
மண்ணியவாறுங் கூறியவாறு காண்க. குடுமிகொண்ட
மண்ணுமங்கலம் எயிலழித்தல்
கூறாமையின் இதனின் வேறாயிற்று. பரிசில்
கடைஇய நிலையும் - பரிசிலரை நீக்குதலமையாது
நெடிது கொண்டு ஒழுகிய தலைவற்குப்
பரிசில் வேட்டோன் தன் கடும்பினது இடும்பை முதலியன கூறித் தா
|