நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3436
Zoom In NormalZoom Out


92.  இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்
காமக் கூட்டம் காணுங் காலை
மறைஓர் தேஎத்து மன்றல் எட்டனுள்
துறையமை நல்லியாழ்த் துணைமையோர்இயல்பே.
 

இவ்  வோத்துக் களவு கற்பென்னுங் கைகோள் இரண்டனுள் களவு
உணர்த்தினமையிற்  களவியலென்னும்  பெயர்த்தாயிற்று;  பிறர்க்குரித்
தென்று  இரு  முதுகுரவரான்  கொடையெதிர்ந்த  தலைவியை  அவர்
கொடுப்பக்  கொள்ளாது இருவருங் கரந்த உள்ளத்தோடு எதிர்ப்பட்டுப்
புணர்ந்த     களவாதலின்     இது     பிறர்க்குரிய     பொருளை
மறையிற்கொள்ளுங்    களவன்றாயிற்று.  இது  வேதத்தை  ‘மறைநூல்’
என்றாற்போலக் கொள்க.

“களவெனப் படுவது யாதென வினவின்
வளைகெழு முன்கை வளங்கெழு கூந்தல்
முளையெயிற் றமர்நகை மடநல் லோளொடு
தளையவிழ் தண்டார்க் காமன் அன்னோன்
விளையாட் டிடமென வேறுமலைச் சாரல்
மானினங் குருவியொடு கடிந்து விளையாடும்
ஆயமுந் தோழியும் மருவிநன் கறியா
மாயப் புணர்ச்சி என்மனார் புலவர்.”

இக்களவைக்  ‘காமப்புணர்ச்சியும்’ (தொல். பொ.498)    என்னுஞ்
செய்யுளியற்  சூத்திரத்திற்  கூறிய நான்கு வகையானும்  மேற்கூறுமாறு
உணர்க.

இன்பத்திற்குப்    பொதுவிலக்கணம் அகத்திணை  யியலுட்   கூறி
அதற்கினமாகிய    பொருளும்    அறங்   கூறும்    புறத்திணையை,
அதன்புறத்து    நிகழ்தலிற்,    புறத்திணையியலுட்     கூறி   யீண்டு
அவ்வின்பத்தினை   விரித்துச்  சிறப்பிலக்கணங்  கூறுதலின்,   இஃது
அகத்திணையியலோடு   இயை   புடைத்தாயிற்று.   ‘வழக்கு...   நாடி’
என்றலின்  இஃது  உலகியலெனப்படும்; உலகத்து மன்றலாவது  குரவர்
கொடுப்பதற்கு  முன்னர்  ஒருவற்கும் ஒருத்திக்குங் கண்ணும்  மனமுந்
தம்முள் இயைவதேயென வேதமுங் கூறிற்றாதலின்.

இச்சூத்திரங்     களவெனப்பட்ட ஒழுக்கம் உலகத்துப்   பொருள்
பலவற்றுள்ளும்  இன்பம்பற்றித்  தோன்றுமெனவும்  அஃது  இன்னதா
மெனவுங் கூறுகின்றது.

இதன் பொருள்: இன்பமும்  பொருளும்  அறனும்  என்றாங்கு -
இன்பமும்    பொருளும்    அறனுமென்று    முற்கூறிய   மூவகைப்
பொருள்களுள்;   அன்பொடு   புணர்ந்த   ஐந்திணை  மருங்கின்  -
ஒருவனோடு ஒருத்தியிடைத் தோன்றிய அன்பொடு கூ