நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3437
Zoom In NormalZoom Out


டிய     இன்பத்தின்  பகுதியாகிய    புணர்தல்   முதலிய   ஐவகை
ஒழுக்கத்தினுள்;   காமக்   கூட்டங்   காணுங்காலை  -   புணர்தலும்,
புணர்தனிமித்தமு  மெனப்பட்ட காமப்புணர்ச்சியை  ஆராயுங் காலத்து;
மறைஓர்  தேஎத்து மன்றல் எட்டனுள்-வேதம் ஓரிடத்துக்  கூறிய மண
மட்டனுள்;  துறை அமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பு -  துறை
அமைந்த    நல்   யாழினையுடைய   பிரிவின்மையோரது   தன்மை
என்றவாறு.

அன்பாவது,

“அடுமரந் துஞ்சுதோள் ஆடவரும் ஆய்ந்த
படுமணிப் பைம்பூ ணவருந் - தடுமாறிக்
கண்ணெதிர்நோக் கொத்தவண் காரிகையிற் கைகலந்து
உண்ணெகிழச் சேர்வதா மன்பு.”

மன்றல் எட்டாவன:  பிரமம், பிராசாபத்தியம்,  ஆரிடம், தெய்வம்,
காந்தருவம், ஆசுரம், இராக்கதம், பைசாசம் என்பன.

அவற்றுட்   பிரமமாவது: ஒத்த கோத்திரத்தானாய் நாற்பத் தெட்டி
யாண்டு பிரமசரியங்  காத்தவனுக்குப் பன்னீராட்டைப் பருவத்தாளாய்ப்
பூப்பு   எய்தியவளைப்   பெயர்த்து   இரண்டாம்  பூப்பு  எய்தாமை
அணிகலன் அணிந்து தானமாகக் கொடுப்பது.

“கயலே ரமருண்கண் கன்னிபூப் பெய்தி
அயல்பே ரணிகலன்கள் சேர்த்தி - இயலின்
நிரலொத்த அந்தணற்கு நீரிற் கொடுத்தல்
பிரமமண மென்னும் பெயர்த்து.”

பிராசாபத்தியமாவது: மகட்கோடற்கு உரிய கோத்திரத்தார் கொடுத்த
பரிசத்து இரட்டி தம்மகட்கு ஈந்து கொடுப்பது.

“அரிமத ருண்கண் ஆயிழை யெய்துதற்கு
உரியவன் கொடுத்த வொண்பொரு ளிரட்டி
திருவின் தந்தை திண்ணிதிற் சேர்த்தி
அரியதன் கிளையோ டமைவரக் கொடுத்தல்
பிரித லில்லாப் பிராசா பத்தியம்.”

ஆரிடமாவது:    தக்கான்  ஒருவற்கு  ஆவும்  ஆனேறும் பொற்
கோட்டுப்  பொற்குளம்பினவாகச்  செய்து அவற்றிடை  நிறீஇப் பொன்
அணிந்து நீரும் இவைபோற் பொலிந்து வாழ்வீரென நீரிற்கொடுப்பது.

“தனக்கொத்த வொண்பொருள் தன்மகளைச் சேர்த்தி
மனைக்கொத்த மாண்புடையாற் பேணி - இனக்கொத்த
ஈரிடத் தாவை நிறீஇயிடை ஈவதே
ஆரிடத்தார் கண்டமண மாம்.”

தெய்வமாவது: பெருவேள்வி வேட்பிக்கின்றார்
 

 

&nbs