நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3440
Zoom In NormalZoom Out


ல்லாப்        பிறப் பினும் இன்றியமையாது உயிரொன்றி ஒருகாலைக்
கொருகால்   அன்பு   முதலியன   சிறத்தற்கு  ஏதுவாகிய  பால்வரை
தெய்வத்தின்  ஆணையாலே,  ஒத்த  கிழவனும் கிழத்தியும் காண்ப -
பிறப்பு   முதலியன  பத்தும்  ஒத்த  தலைவனுந்  தலைவியும்  (273)
எதிர்ப்படுப;  மிக்கோன்  ஆயினும்  கடி  வரை இன்றே - அங்ஙனம்
எல்லாவாற்   றானு   ஒவ்வாது   தலைவன்   உயர்ந்  தோனாயினுங்
கடியப்படாது எ-று.

‘என்றிரு     பால்வயிற் காண்ப’ எனப் பால் வன்பால் மென்பால்
போல  நின்றது. உயர்ந்த  பாலை  “நோய் தீர்ந்த  மருந்து” போற்
கொள்க.   ஒரு  நிலம்  ஆதலை  முற்கூறினார்,  இவ்வெழுக்கத்திற்கு
ஓதியது  குறிஞ்சி  நிலமொன்றுமே ஆதற்சிறப்பு நோக்கி. வேறு நிலம்
ஆதலைப்   பிற்   கூறினார்,  குறிஞ்சி   தன்னுள்ளும்  இருவர்க்கும்
மலையும்  ஊரும்  வேறாதலுமன்றித்   திணை   மயக்கத்தான் மருதம்
நெய்தலென்னும்   நிலப்பகுதியுள்   ஒருத்தி   அரிதின்   நீங்கிவந்து
எதிர்ப்படுதல்    உளதாதலுமென    வேறுபட்ட    பகுதி    பலவும்
உடன்கோடற்கு ஒரு நிலத்துக் காமப்புணர்ச்சிப் பருவத்தாளாயினாளை
ஆயத்தின்    நீங்கித்    தனித்து   ஓரிடத்து   எளிதிற்   காண்டல்
அரிதென்றற்குப்  ‘பால தாணையிற் காண்ப’ என்றார். எனவே, வேற்று
நிலத்திற்காயின்  வேட்டை  மேலிட்டுத் திரிவான் அங்ஙனந் தனித்துக்
காணுங் காட்சி அருமையாற் பால தாணை வேண்டுமாயிற்று.

“இவனிவ ளைம்பால் பற்றவும் இவளிவன்
புன்தலை ஓரி வாங்குநள் பரியவும்
காதற் செவிலியர் தவிர்ப்பவுந் தவிராது
ஏதில் சிறுசெரு உறுப மன்னோ
நல்லைமன் றம்ம பாலே மெல்லியல்
துணைமலர்ப் பிணையல் அன்னவிவர்
மணமகி ழியற்கை காட்டி யோயே.” 
         (குறுந்.229)

இஃது ஓரூர் என்றதாம்.

“காமஞ் செப்பாது கண்டது மொழிமோ”         (குறுந்.2)

என்றது  என்  நிலத்து  வண்டாதலின்  எனக்காகக்  கூறாதே  சொல்
என்றலிற் குறிஞ்சிநிலம் ஒன்றாயிற்று.

“இலங்கும் அருவித்து இலங்கும் அருவித்தே
வானின் இலங்கும் அருவித்தே தானுற்ற
சூள்பேணான் பொய்த்தான் மலை”

என்புழிப் பொய்த்த