வன்
மலையும் இலங்கும் அருவித்தென
வியந்துகூறித் தமது மலைக்கு நன்றி
இயல்பென்றலிற் குறிஞ்சியுள்ளும் மலை வேறாயிற்று. “செவ்விரல் சிவப்பூரச் சேட்சென்றா யென்றவன் பௌவநீர்ச் சாய்க்கொழுதிப் பாவைதந் தனைத்தற்கோ கௌவைநோய் உற்றவர் காணாது கடுத்தசொல் ஒவ்வாவென்றுணராய்நீ யொருநிலையே யுரைத்ததை.”
(கலி.76) இது,
மருதத்துத் தலைவி களவொழுக்கங்
கூறுவாள் பௌவநீர்ச் சாய்ப்பாவை தந்தான் ஒருவனென நெய் தனிலத்து
எதிர்ப்பட்டமை கூறியது. ஆணை விதி. கைகோளின் முதற்கட் கூறுதலிற் கற்பின்காறும் ஒன்றும் வேறுஞ் செல்லும். பாலது ஆணையும் அவ்வாறாம். மிகுதலாவது: குலங் கல்வி
பிராயம் முதலியவற்றான் மிகுதல். எனவே, அந்தணர், அரசர் முதலிய வருணத்துப் பெண்கோடற்கண் உயர்தலும், அரசர் முதலியோரும் அம்முறை உயர்தலுங் கொள்க. இதனானே அந்தணர் முதலியோர் அங்ஙனம் பெண்கோடற்கட் பிறந்தோர்க்கும் இவ் வொழுக்கம் உரித்தென்று கொள்க. கடி, மிகுதி. அவர் அங்ஙனம் கோடற்கண் ஒத்த மகளிர் பெற்ற புதல்வரோடு ஒழிந்த மகளிர் பெற்ற புதல்வர் ஒவ்வாரென்பது உணர்த்தற்குப் பெரிதும் வரையப்படாதென்றார். பதினாறு தொடங்கி இருபத்து நான்கு ஈறாகக் கிடந்த யாண்டொன்பதும் ஒரு பெண்கோடற்கு மூன்று யாண்டாக அந்தணன் உயருங் கந்தருவ மணத்து; ஒழிந்தோ ராயின் அத்துணை உயரார். இருபத்து நான்கிரட்டி நாற்பத்தெட்டாதல் பிரம முதலியவற்றான் உணர்க. ‘வல்லெழுத்து மிகுதல்’ என்றாற்போல மிகுதலைக் கொள்ளவே பிராயம் இரட்டியாயிற்று. கிழத்தி மிகுதல் அறக்கழிவாம். ‘கிழவன் கிழத்தி’ எனவே
பலபிறப்பினும் ஒருவர்க்கு ஒருவர் உரிமை எய்திற்று. இங்ஙனம் ஒருமை கூறிற்றேனும் ‘ஒருபாற்கிளவி’
(தொல்.பொ.222) என்னுஞ் சூத்திரத்தான்
நால்வகை நிலத்து நான்கு
வருணத்தோர் கண்ணும் ஆயர்
வேட்டுவர் முதலியோர் கண்ணுங் கொள்க. இ
|