இஃது
எய்தாத தெய்துவித்து எய்தியது விலக்கிற்று,
‘முன்னைய நான்கும்’ (தொல்.பொ.52) என்றதனாற் கூறிய ஐயந் தலைவன் கண்ணதே எனவுந் தலைவிக்கு நிகழுமோ என்னும் ஐயத்தை விலக்குதலுங் கூறலின். (இ-ள்.)
சிறந்துழி
ஐயம் சிறந்தது என்ப - அங்ஙனம் எதிர்ப் பாட்டின் இருவருள்ளுஞ் சிறந்த தலைவன் கண்ணே
ஐயம் நிகழ்தல் சிறந்ததென்று கூறுவர் ஆசிரியர்; இழிந்துழி இழிபே சுட்டலான - அத் தலைவனின் இழிந்த தலைவிக்கண் ஐயம் நிகழுமாயின் இன்பத்திற்கு இழிவே அவள் கருதும்
ஆதலான் எ-று. தலைவற்குத்
தெய்வமோ அல்லளோவென நிகழ்ந்த ஐயம்,
நூன் முதலியவற்றான் நீக்கித்
தெய்வமன்மை
உணர்தற்கு அறிவுடையனாதலானுந்,
தலைவிக்கு, முருகனோ இயக்கனோ மகனோவென
ஐயம் நிகழின் அதனை நீக்கி உணர்தற்குக் கருவியிலள் ஆகலானும் இங்ஙனங் கூறினார். தலைவிக்கு, ஐயம் நிகழின் அச்சமேயன்றிக் காமக்குறிப்பு நிகழாதாம். மகடூஉவின் ஆடூஉச் சிறத்தல் பற்றிச் ‘சிறந்துழி’ என்றார். உ-ம்: “அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலுமென் னெஞ்சு.”
(குறள்.1081) எனவரும்.
(3) ஐய நீங்கித் தெளிதற்குரிய காரணம்
இவையெனல்
|