ணர்ச்சி
வேட்கை நிகழ்ந்துழித் தலைவியைக்
கூடற்குக் கருதி உரை நிகழ்த்துங்காற் கூற்று மொழியான் அன்றிக் கண்ணான் உரை நிகழ்த்து மென்பதூஉம் அது கண்டு தலைவியும் அக்கண்ணானே தனது வேட்கை புலப்படுத்திக் கூறுமென்பதூஉங் கூறுகின்றது; எனவே இது புணர்ச்சி நிமித்தமாகிய வழிநிலைக்காட்சி கூறுகின்றதாயிற்று. (இ-ள்.) அறிவு - தலைவன்
அங்ஙனம் மக்களுள்ளாளென்று அறிந்த அறிவானே; உடம்படுத்தற்கு - தலைவியைக் கூட்டத்திற்கு உடம்படுத்தற்கு; நாட்டம் இரண்டும் கூட்டி உரைக்கும் - தன்னுடைய நோக்கம் இரண்டானுங் கூட்டி வார்த்தை சொல்லும்; குறிப்புரை நாட்டம் இரண்டும் ஆகும் -
அவ்வேட்கை கண்டு தலைவி தனது வேட்கை
புலப்படுத்திக் கூறுங் கூற்றுந்
தன்னுடைய நோக்கம் இரண்டானுமாம்
எ-று. ‘நாட்டம் இரண்டும்’ இரண்டிடத்துங் கூட்டுக. உம்மை விரிக்க. இங்ஙனம் இதற்குப் பொருள்கூறல் ஆசிரியர்க்குக் கருத்தாதல் ‘புகுமுகம் புரிதல்’
(தொல்.பொ.261) என்னும் மெய்ப்பாட்டியற் சூத்திரத்தானுணர்க;
அதற்குப் பேராசிரியர் கூறிய உரையானுமுணர்க. ஒன்று
ஒன்றை ஊன்றி நோக்குதலின் நாட்டமென்றார்.
நாட்டுதலும் நாட்டமும் ஒக்கும். உ-ம்: “நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு தானைக்கொண் டன்ன துடைத்து”
(குறள்.1082) என வரும். இது புகுமுகம் புரிதல் என்னும் மெய்ப்பாடு
கூறியது. (5) புணர்ச்சியமைதி இவற்றான்நிகழுமெனல்
|