ய்ப்பாட்டியலுட் கூறிய மூன்று சூத்திரத்தையும் (261-263) ஈண்டுக் கூறியுணர்க. உ-ம்: “கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல.”
(குறள்.1100) “கண்களவு கொள்ளுஞ் சிறுநோக்கம் காமத்திற் செம்பாகம் அன்று பெரிது.”
(குறள்.1092) இதனை நான்கு
வருணம் ஒழிந்தோர்க்குங் கொள்க. உ-ம்: “பானலந் தண்கழிப் பாடறிந்து தன்ஐமார் நூனல நுண்வலையா னொண்டெடுத்த - கானற் படுபுலால் காப்பாள் படை நெடுங்கண் ணோக்கங் கடிபொல்லா வென்னையே காப்பு.”
(திணை.நூற்.32) இனி முயங்கி மகிழ்ந்து கூறுவன: “கோடல் எதிர்முகைப் பசுவீ முல்லை நாறிதழ்க் குவளையோ டிடைப்பட விரைஇ ஐதுதொடை மாண்ட கோதை போல நறிய நல்லோள் மேனி முறியினும் வாயது முயங்கற்கும் இனிதே.”
(குறுந்.62) “தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால் அம்மா அரிவை முயக்கு.”
(குறள்.1107) உரையிற்
கோடலான் மொழிகேட்க
விரும்புதலுங் கூட்டிய தெய்வத்தை
வியந்து கூறுதலும்
வந்துழிக் காண்க. தலைவன்கண் உள்ளப்புணர்ச்சி மாத்திரைநிகழ்தலு முண்டென்றற்குக்
காரணங் கூறல்
|