நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3454
Zoom In NormalZoom Out


றுதல்   -  நீடித்ததென்று  இரங்கினானென்பது  அறிந்தோள்  இவன்
ஆற்றானாகி இறந்துபடுவனெனப் பெருநாணுக் கடிதுநீங்குதல்:

சொல்லிய நுகர்ச்சி  வல்லே பெற்றுழி - தலைவன் தான் முற்கூறிய
நுகர்ச்சியை விரையப் பெற்றவழி:

பெற்றவழி   என்பதனைப்    பெறுதலெனப்     பெயர்ப்படுத்தல்
அக்கருத்தாற் பெறுதும்.

தீராத்  தேற்றம்   உளப்படத்    தொகைஇ    -   எஞ்ஞான்றும்
பிரியாமைக்குக் காரணமாகிய சூளுறுதல் அகப்படத் தொகுத்து:

புணர்ச்சி நிகழ்ந்துழியல்லது தேற்றங்கூறல் ஆகாதென்றற்கு ‘வல்லே
பெற்றுழித்   தீராத்தேற்ற’  மென்றார்.  முன்  தெளிவகப்  படுத்தபின்
நிகழ்ந்த  ஆற்றாமை தீர்தற்குத் தெய்வத்தொடுசார்த்திச் சூளுறுதலின்
இத்தேற்றமும் வேண்டிற்று.

பேராச்சிறப்பின் இருநான்கு கிளவியும் - குறையாச் சிறப்பினவாகிய
இவ்வெட்டும்:

தாமே   கூடும் இடந்தலைப்பாடும் பாங்கனாற் குறிதலைப் பெய்யும்
இடந்தலைப்பாடும்   ஒத்த   சிறப்பின   வாதற்குப்  பேராச்  சிறப்பி’
னென்றார்.

எனவே     இடந்தலைப்பாடு இரண்டாயிற்று.  தோழியிற் கூட்டம்
போலப்  பாங்கன்  உரையாடி  இடைநின்று  கூட்டாமையிற்  பாங்கற்
கூட்டம்  என்றதனைத்  தலைமகன் பாங்கனைக் கூடுங் கூட்டமென்று
கொள்க.

உ-ம்:

“உறுதோ றுயிர்தளிர்ப்பத் தீண்டலாற் பேதைக்கு
அமிழ்தி னியன்றன தோள்.”
              (குறள்.1106)

இஃது என்  கை  சென்று  றுந்தோறும்  இன்னுயிர்  தளிர்க்கும்படி
யான் தீண்டப்படுதலினெனப் பொருள்கூறவே மெய் தீண்ட லாயிற்று.

“தீண்டலும் இயைவது கொல்லோ மாண்ட
வில்லுடை வீளையர் கல்லிடுபு எடுத்த
நனந்தலைக் கானத்து இனந்தலைப் பிரிந்த
புன்கண் மடமா னேர்படத் தன்னையர்
சிலைமாண் கடுவிசைக் கலைநிறத் தழுத்திக்
குருதியொடு பறித்த செங்கோல் வாளி
மாறுகொண் டன்ன வுண்கண்
நாறிருங் கூந்தற் கொடிச்சி தோளே.”
       (குறுந்.272)

கழறிய   பாங்கற்குக் கூறுந்தலைவன் இவனான் இக்குறை முடியாது.
நெருநல்  இடந்தலைப்பாட்டிற்  கூடியாங்குக்  கூடுவல்,  அது  கூடுங்
கொலென்று  கூறுவான்  அற்றைஞான்று  மெய் தொட்டுப் பயின்றதே
கூறினான்.

“சொல்லிற் சொல்லெதிர் கொள்ளாய் யாழநின்
திருமுகம்