நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3458
Zoom In NormalZoom Out


ண்டா ளிடம்”                       (திணை.நூற்.9)

எனவும்,

“எலுவ சிறாஅ ரேமுறு நண்ப
புலவர் தோழ கேளாய் அத்தை
மாக்கட னடுவ ணெண்ணாட் பக்கத்துப்
பசுவெண் திங்கள் தோன்றி யாங்குக்
கதுப்பயல் விளங்குஞ் சிறுநுதல்
புதுக்கோள் யானையிற் பிணித்தற்றால் எம்மே”
                                     (குறுந்.129)

எனவும் வரும்.

நிற்பவை   நினைஇ நிகழ்பவை உரைப்பினும் - நிற்பவை நினைஇ
உரைப்பினும்  நிகழ்பவை  உரைப்பினும்  என உரைப்பினென்பதனை
முன்னுங் கூட்டுக;

அது    கேட்ட பாங்கன் உலகத்து நிலைநிற்கின்ற நற்குணங்களை
அவனை நினைப்பித்துக் கழறிக் கூறினும், அக்கழறியவற்றை மறுத்துத்
தன் நெஞ்சின் நிகழும் வருத்தங்களை அவற்குக் கூறினும்:

உ-ம்:

“குன்ற முருளிற் கொடித்தேரோய் குன்றியுள்
ஒன்றும் ஒழிவ துளதாமோ - நன்றறிந்து
தாமுறையே செய்வார் தகவிலவே செய்தக்கால்
யார்முறை செய்பவோ மற்று.”

எனவும்,

“தேரோன் தெறுகதிர் மழுங்கினுந் திங்கள்
தீரா வெம்மையொடு திசைநடுக் குறுப்பினும்
பெயராப் பெற்றியின் திரியாச் சீர்சால்
குலத்தில் திரியாக் கொள்கையுங் கொள்கையொடு
நலத்தில் திரியா நாட்டமும் உடையோய்
கண்டத னளவையிற் கலங்குதி யெனினிம்
மண்திணி கிடக்கை மாநிலம்
உண்டெனக் கருதி யுணரலென் யானே”

எனவும் இவை நிற்பனை நினைஇக் கழறின.

“காமங் காம மென்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே நினைப்பின்
முதைச்சுவற் கலித்த முற்றா விளம்புல்
மூதா தைவந் தாங்கு
விருந்தே காமம் பெருந்தோ ளோயே.”    
(குறுந்.204)

இதுவும் அது.

“நயனுந் நண்புந் நாணுநன் குடைமையும்
பயனும் பண்பும் பாடறிந் தொழுகலும்
நும்மினும் உடையேன் மன்னே கம்மென
எதிர்த்த தித்தி யேரிள வனமுலை
விதிர்த்து விட்டன்ன அந்நுண் சுணங்கின்
ஐம்பால் வகுத்த கூந்தற் செம்பொன்
திருநுதற் பொலிந்த தேம்பாய் ஓதி
முதுநீர் இலஞ்சி பூத்த குவளை
எதிர்மலர்ப் பிணைய லன்னவிவள்
அரிமதர் மழைக்கண் காணா வூங்கே.”
        (நற்.160)

“இடிக்குங் கேளிர் நுங்குறை யாக
நிறுக்க லாற்றினோம் நன்றுமன் தில்ல
ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கிற்
கையில் ஊமன் கண்ணிற் காக்கும்
வெண்ணெ யுணங்கல் போலப்
பரந்தன் றிந்நோய் நோன்றுகொ