ங்கன் அவ்விடத்துக் காணுங் கொலென்று ஐயுற்றது.
“அளிதோ தானே யருண்மிக வுடைத்தே களிவாய் வண்டினங் கவர்ந்துண் டாடும் ஒளிதார் மார்பி னோங்கெழிற் குரிசிலைப் பிரியாத் துயரமொடு பேதுறுத் தகன்ற கிளியேர் மழலைக் கேழ்கிளர் மாதர் ஆர்ந்த சுற்றமொடு தமரின் நீக்கத் தானே தமியள் காட்டிய வானோர் தெய்வம் வணங்குவல் யானே.” இது குறிவழிச்சென்ற பாங்கன் தலைவியை எளிதிற் காட்டிய தெய்வத்தை வணங்கியது.
“கண்ணென மலருங் குவளையும் அடியெனத் தண்ணெனுந் தடமலர் தயங்குதா மரையும் முலையென முரணிய கோங்கமும் வகையெழின் மின்னென நுடங்கு மருங்குலும் மணியென வயின்வயி னிமைக்கும் வாங்குபல் லுருவிற் காண்டகு கமழ்கொடி போலும்என் ஆண்டகை யண்ணலை யறிவுதொலைத் ததுவே.” இஃது இவள்போலும் இறைவனை வருத்தினாளெனப் பாங்கன் ஐயுற்றது.
“கண்ணே, கண்ணயற் பிறந்த கவுளழி கடாஅத்த அண்ணல் யானை யாரியர்ப் பணித்த விறற்போர் வானவன் கொல்லி மீமிசை அறைக்கான் மாச்சுனை யவிழ்ந்த நீலம் பல்லே, பல்லரண் கடந்த பசும்பூண் பாண்டியன் மல்குநீர் வரைப்பிற் கொற்கை முன்துறை ஊதை யீட்டிய வுயர்மண லடைகரை ஓத வெண்டிரை யுதைத்த முத்தம் நிறனே, திறல்விளங் கவுணர் தூங்கெயி லெறிந்த விறன்மிகு முரசின் வெல்போர்ச் சோழன் நலனணி யரங்கிற் போகிய மாவின் உருவ நீள்சினை யொழுகிய தளிரே என்றவை பயந்தமையறியார் நன்று மடவர் மன்றவிக் குறவர் மக்கள் தேம்பொதி கிளவி யிவளை யாம்பயந் தேமெம் மகளென் போரே.”
இது தலைவியை வியந்தது.
“பண்ணாது பண்மேல்தேன் பாடுங் கழிக்கானல் எண்ணாது கண்டாருக் கேரணங்காம் - எண்ணாது சாவார்சான் றாண்மை திரிந்திலார் மற்றிவளைக் காவார் கயிறுரீஇ விட்டார்.” (திணைமாலை.நூற்.47)
பாங்கன் தலைவனை வியந்தது.
“பூந்த ணிரும்புனத்துப் பூசல் புரியாது பூழி யாடிக் காந்தட் கமழ்குலையாற் காதன் மடப்பிடிதன்
கவுள்வண்டோச்ச வேந்தன்போ னின்ற விறற்களிற்றை வில்லினாற்
கடிவார் தங்கை ஏந்தெழி லாக மியையா தியைந்தநோ யியையும்
போலும்.”
இது தலைவற்கு வருத்தந்தகுமென அவனை வியந்தது. “வியமுறு துயரமொடு” என்னும் செய்யுளுங் கொள்க.
இனிப் பாங்கன் தலைவி தன்மை தலை
|