நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3463
Zoom In NormalZoom Out


றவும் வினாயது.

“கல்லுற்ற நோய்வருத்தக் காலு நடையற்றேன்
எல்லுற் றியானும் வருந்தினேன் - வில்லுற்ற
பூங்க ணிமைக்கும் புருவ மதிமுகத்தீர்
ஈங்கிதுவோ நும்முடைய வூர்.”

இஃது ஊர் வினாயது.

“செறிகுர லேனற் சிறுகிளி காப்பீர்
அறிகுவே னும்மை வினாஅய் - அறிபறவை
அன்னம் நிகர்க்குஞ்சீர் ஆடமை மென்றோளிர்
என்ன பெயரிரோ நீர்.”

இது பெயர் வினாயது.

“நறைபரந்த சாந்தம் அறவெறிந்து நாளான்
உறையெதிர்ந்து வித்தியவூழ் ஏனற் - பிறையெதிர்ந்த
தாமரைபோல் வாண்முகத்துத் தாழ்குழலீர் காணீரோ
ஏமரை போந்தன வீண்டு.”
              (திணை.நூற்.1)

“தங்குறிப்பி னோருந் தலைச்சென்று கண்டக்கால்
எங்குறிப்பி னோமென் றிகழ்ந்திரார் - நுங்குறிப்பின்
வென்றி படர்நெடுங்கண் வேய்த்தோளீர் கூறிரோ
வன்றி படர்ந்த வழி.”

வன்றி - பன்றி

“தண்டு புரைகதிர்த் தாழ்குரற் செந்தினை
மண்டுபு கவரு மாண்டகிளி மாற்றும்
ஓண்டொடிப் பணைத்தோ ளொண் ணுத லிறையீர்
கண்டனி ராயிற் கரவா துரைமின்
கொண்டன குழுவி னீங்கி மண்டிய
உள்ளழி பகழியோ டுயங்கியோர்
புள்ளி மான்கலை போகிய நெறியே.”

இவை கெடுதிவினாயின.

“மெல்லிலைப் பரப்பின் விருந்துண் டியானுமிக்
கல்லென் சிறுகுடித் தங்கின்மற் றெவனோ”
    (அகம்.110)

எனவும்,

“இல்லுடைக் கிழமை யெம்மொடு புணரின்
தீது முண்டோ மாத ரீரே”
               (அகம்.230)

எனவும் வருவன, ‘பிறவு’ மென்றதனாற் கொள்க.

குறையுறூஉம்     பகுதி, குறையுறுபகுதி எனவுமாம்; எனவே குறை
யுறுவார்  சொல்லுமாற்றானே கண்ணி முதலிய கையுறையொடு சேறலுங்
கொள்க.   பகுதியென   வரையாது   கூறலில்   தனித்துழிப்   பகுதி
முதலியனவும் இருவரு முள்வழி இவன் தலைப்பெய்தலுடையன் எனத்
தோழி  உணருமாறும் வினாவுதல் கொள்க. இவை குறையுறவுணர்தலும்
இரு   வருமுள்வழி   அவன்  வரவுணர்தலுமாம்.  முன்னுறவுணர்தல்
நாற்றமுந் தோற்றமும்’(தொல்.பொ.114) என்புழிக் கூறுப. மதியுடம்பாடு
மூவகை யவென மேற்கூறுப.                              (127)

தோழி    குறை அவட் சார்த்தி மெய்யுறக்கூறலும் - தோழி இவன்
கூறுகின்ற  குறை தலைவியிடத்தேயாய் இருந்ததென்று அவள் மேலே
சேர்த்தி அதனை உண்மையென்றுணரத் தலைவன் கூறுதலும்:

உ-ம்.

“கருங்கட லுட்கலங்க நுண்வலை வீசி
ஒருங்குடன் தன்னைமார் தந்த கொழுமீன்
உணங்கல்புள் ளோப்பு மொளியிழை மாதர்
அணங்காகும் ஆற்ற வெமக்கு.”

“பண்பும் பாயலுங் கொண்டனள் தொண்டித்
தண்கமழ் புதுமலர் நாறும் ஒண்டொடி
ஐதமர்ந் தகன்ற வல்குற்
கொய்தளிர் மேனி கூறுமதி தவறே.”
       (ஐங்குறு.176)

இவை வெளிப்பட்டன. இவற்றின் வேறு