ற்றானாய்க் கூறுவனவுந், தோழி இற்புணர்ச்சிக்கண் தன்னிலைக் கொளீஇக் கூறுவனவும், இரவுக்குறிக்கண் வருகின்றான் தலைவியை ஐயுற்றுப் பாங்கற்குக் கூறுவனவும், பிறவும் வேறுபட வருவனவெல்லாம் இதன்கண் அமைக்க.
“என்றும் மினியள் ஆயினும் பிரித லொன்று மின்னா ளன்றே நெஞ்சம் பனிமருந்து விளைக்கும் பரூஉக்கண் இளமுலைப் படுசாந்து சிதைய முயங்கும் சிறுகுடிக் கானவன் பெருமட மகளே”
“கோடாப் புகழ்மாறன் கூடல் அனையாளை யாடா வடகினுங் காணேன்போர் - வாடாக் கருங்கொல்வேன் மன்னர் கலம்புக்க கொல்லோ மருங்குல்கொம் பன்னாண் மயிர்” (திணை.நூற்.4)
“பெறுவ தியையா தாயினு முறுவதொன்று உண்டுமன் வாழிய நெஞ்சே திண்டேர்க் கைவள ரோரி கானந் தீண்டி எறிவளி கமழு நெறிபடு கூந்தல் மையீ ரோதி மாஅ யோள்வயி னின்றை யன்ன நட்பி னிந்நோ யிறுமுறை யெனவொன் றின்றி மறுமை யுலகத்து மன்னுதல் பெறினே.”
(குறுந்.199)
“நோயு நெகிழ்ச்சியும் வீடச்சிறந்த வேய்வனப் புற்ற தோளை நீயே யென்னுள் வருதியோ வெழினடைக் கொடிச்சி முருகுபுணர்ந் தியன்ற வள்ளி போலநின் உருவுகண் ணெறிப்ப நோக்கலாற் றலனே போகிய நாகப் போக்கருங் கவலைச் சிறுகட் பன்றிப் பெருஞ்சின ஒருத்தல் சேறா டிரும்புற நீறொடு சிவண வெள்வசிப் படீஇயர் மொய்த்த வள்பழீஇக் கோணாய் கொண்ட கொள்ளைக் கானவர் பெயர்க்குஞ் சிறுகுடி யானே” (நற்.82)
“மயில்கொல் மடவாள்கொல் மாநீர்த் திரையுள் பயில்வதோர் தெய்வங்கொல் கேளீர் - குயில்பயிலும் கன்னி யிளஞாழல் பூம்பொழில் நோக்கிய கண்ணின் வருந்துமென் னெஞ்சு.”
(திணை.ஐம்.49)
என வரும். அன்பு உற்று நகினும் - தோழி குறைமறுப்புழி அன்பு தோன்ற நகினும்:
உ-ம்:
“நயனின் மையிற் பயனிது வென்னாது பூம்பொறிப் பொலிந்த வழலுமி ழகன்பைப் பாம்புயி ரணங்கி யாங்கு மீங்கிது தகாஅது வாழியோ குறுமக ணகாஅது உரைமதி உடையுமென் னுள்ளம் சாரற் கொடுவில் கானவன் கோட்டுமா தொலைச்சிப் பச்சூன் பெய்த பகழி போலச் சேயரி பரந்த ஆயிழை மழைக்கண் உறாஅ நோக்கம் உற்றவென் பைத னெஞ்சம் உய்யு மாறே.”
|