மான் வலமிகு முன்பின் மழகளிறு பார்க்கும் மரம்பயில் சோலை மலியப் பூழியர் உருவத் துருவி னாண்மேய லாரு மாரி யெண்கின் மலைச்சுர நீளிடை நீநயந்து வருத லெவனெனப் பலபுலந் தழுதனை யுறையும் அம்மா வரிவை பயங்கெழு பலவின் கொல்லிக் குடவரைப் பூதம் புணர்த்த புதிதியல் பாவை விரிகதிர் இளவெயிற் றோன்றி யன்னநின் ஆய்நல முள்ளி வரினெமக் கேம மாகு மலைமுத லாறே.”
(நற்.132)
எனத் தலைவி ஆற்றினதருமை கூறியதற்குத் தலைவன் கூறியது.
இரட்டுறமொழித லென்பதனான், ‘ஆற்றிடையுறுத’ற்கு வரைவிடை வைத்துப் பிரிந்தான் ஆற்றிடை வருத்தமுற்றுக் கூறுவனவுங் கொள்க. அது போகின்றான் கூறுவனவும் மீண்டவன் பாகற்குக் கூறுவனவுமாம்.
“ஓம்புமதி வாழியோ வாடை பாம்பின் தூங்குதோல் கடுக்குந் தூவெள் ளருவிக் கல்லுயர் நண்ணி யதுவே நெல்லி மரையின மாரு முன்றில் புல்வேய் குரம்பை நல்லோ ளூரே.” (குறுந்.235)
“கவலை கெண்டியவ கல்வாய்ச் சிறுகுழி கொன்றை யொள்வீதாஅய்ச் செல்வர் பொன்செய் பேழை மூய்திறந் தன்ன காரெதிர் புறவி னதுவே யுயர்ந்தோர்க்கு நீரொடு சொரிந்த மிச்சில் யாவர்க்கும் வரைகோ ளறியாச் சொன்றி நிரைகோற் குறுந்தொடிதந்தை யூரே.” (குறுந்.233)
அவ்வினைக்கு இயல்பே - அத்தோழியிற் கூட்டத்திடத்துத் தலைவன் கூற்று நிகழ்வதாகிய இலக்கணமாம்
எ-று. (12)
உலகியலாற் புணர்க்கும் பாங்கனிமித்தம் இத்துணையவெனல்
|