நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3473
Zoom In NormalZoom Out


ண்டாம்;     அவை  எண்  வகை  மணனுமாதலின்  அவற்றைக்
கைக்கிளை   முதலிய   ஏழுதிணைக்கும்   இன்னவாறு   உரியவென
வருகின்ற   சூத்திரங்களாற்   பன்னிரு  பகுதியும்  அடங்கக்  கூறுப.
அவ்வாற்றானே  பிரமம்  பிராசபத்தியம்  ஆரிடந் தெய்வம் எனவும்,
முல்லை   குறிஞ்சி   பாலை   மருதம்  நெய்தல்  எனவும்,  ஆசுரம்
இராக்கதம்   பேய்   எனவும்   பன்னிரண்டாம்.   பிரமம்   முதலிய
நான்கற்கும்    பாங்கன்    ஏதுவாகலின்    இவ்வாறு    பிரமசரியங்
காத்தானெனவும்,  இவன்  இன்ன  கோத்திரத்தான் ஆகலின் இவட்கு
உரியனெனவும்,  இவளை  இன்னவாற்றாற்  கொடுக்கத்  தகுமெனவும்,
இன்னோனை   ஆசாரியனாகக்கொண்டு   வேள்வி   செய்து  மற்றிக்
கன்னியைக்  கொடுக்கத்  தகுமெனவுஞ் சொல்லிப் புணர்க்குமென்பது.
இனி,  யாழோர்  கூட்டத்துள்  ஐந்திணையுமாயிற்  பாடலுட்  பயின்ற
வகையானே  முதல் கரு உரிப் பொருள் வரையறைபற்றி முறை சிறந்து
வருதலும்  பெயர்கொளப் பெறாமையும் உடையவன்றே, அவ்வாறன்றி,
ஈண்டுக்   கொள்கின்ற   யாழோர்  கூட்டத்து  ஐந்திணையு  மாயின்
அவ்வந்நிலத்தியல்பானும்  பிறபாடை  யொழுக்கத்தானும்  வேறுபட்ட
வேறுபாடு   பற்றியுஞ்   சுட்டி   யொருவர்ப்   பெயர்   கொடுத்தும்
வழங்குகின்ற  உலகியலான்  எல்லாரையும் இடைநின்று புணர்ப்பாருள்
வழி   அவ்வந்நிமித்தங்களும்   வேறு   வேறாகி   வரும்  பாங்கன்
நிமித்தங்களையுடைய எனப்பட்டன.

இங்ஙனம்     ஐந்திணைப் பகுதியும் பாங்கனிமித்தமாங்கால் வேறு
படுமெனவே, புலனெறி வழக்கிற்பட்ட இருவகைக் கைகோளும் போலா
இவை  யென்பதூஉம்,  அவ்வந்நிலத்தின்  மக்கட்குத் தக்க மன்றலும்
வேறாகலின் அவர்க்கும் பாங்கர் உளரென்பதூஉம், இவ்வாற்றான் எண்
வகை  மணனும்  உடனோதவே இவையும் ஒழிந்த எழுவகை மணனும்
போல அகப்புறமெனப்படுமென்பதூஉங் கொள்க.

இனி,     ஆசுரத் தன்மையாளைக் குரவர் இன்னவாறு கொடுப்பர்
நீயுஞ்  சேறியென்று ஒருவன் பாங்குபடக் கூறலும், இவனை அவட்குக்
காட்டி   இவன்   இன்னனென்று   ஒருவன்   இடைநின்று  கூறலும்
உண்மையின்,   அதுவும்  பாங்கனிமித்தமுடைத்து.  இராக்கதத்திற்கும்
இத்தன்மையாள் இன்னுழி இருந்தாளென்று பாங்காயினார் கூறக்கேட்டு
ஒருவன்  வலிதிற் பற்றிக் கோடலின் இதுவும் பாங்கனிமித்தமுடைத்து.
பேய்க்கும் பொருந்துவது அறியாதான் இடைநின்று புணர்ப்பின்