மேற் பன்னிரண்டெனப்பட்ட
எண்வகை மணத்தினுள் ஏழனை எழுதிணையுள் இன்னதிணைப்பாற்படும் என்கின்றது.
(இ-ள்.) முன்னைய மூன்றும் கைக்கிளைக் குறிப்பே - இதற்கு முன் நின்ற ஆசுரமும் இராக்கதமும் பைசாசமுங் கைக்கிளை யென்றற்குச் சிறந்தில வேனுங் கைக்கிளையெனச் சுட்டப்படும்; பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே - பின்னர் நின்ற பிரமம் பிராசாபத்தியம் ஆரிடந் தெய்வமென்னும் நான்கனையும் பெருந்திணை தனக்கு இயல்பாகவே பெறுமெனவுங் கூறப்படும் எ-று.
மன்றல் எட்டு என்ற வரலாற்று முறையானே ‘வாளாது பன்னி ரண்டென்றார்’ என்பதே பற்றி, ஈண்டும் அம்முறையானே இடவகையான் ‘முன்னைய மூன்றும்’ ‘பின்னர் நான்கு’ மென்றார். எனவே, இனிக் கூறும் ‘யாழோர் மேன’ (தொல்.பொ.106) ஐந்தும் ஒன்றாக அவ்விரண்டற்கும் இடையதெனப் படுவதாயிற்று. வில்லேற்றியாயினுங் கொல்லேறு தழீஇயாயினுங் கொள்வ லென்னும் உள்ளத்தனாவான் தலைவனேயாதலின், அதனை முற்படப்பிறந்த அன்பு முறைபற்றி ஒருதலைக் காம மாகிய ‘கைக்கிளை’ யென்றார். இராக்கதம் வலிதின் மணஞ்செய்தலாதலின் அதுவும் அப்பாற்படும்: பேயும் அப்பாற்படும். இவை முன்னைய
மூன்றுங் கைக்கிளையாயவாறு. ‘காமஞ்சாலா இளமையோள்
வயிற்’ (தொல்.பொ.50)
கைக்கிளை சிறப்புடைத் தென்றற்குப்
‘புல்லித் தோன்றும்’ (தொல்.பொ.50) எனக் கூறி, இதனை வாளாது ‘குறிப்’பென்றார். ஆண்டுப் பிற்காலத்தன்றிக் காட்சிக்கண் மணம் அதற்கின்மையின் ஈண்டு மணங் கூறும்வழிக் கூறாது அகத்திணையியலுட் கூறினார். ‘ஏறிய மடன்மா’ முதலியவற்றைப்
‘பெருந்திணைக் குறிப்பே’ (தொல்.பொ.51) எனக் கூறி, ஈண்டுப் ‘பெருந்திணை பெறுமே’ யென்றார், அவை சிறப்பில இவை சிறப்புடைய வென்றற்கு.
இந் நான்கும் ஒருதலைக் காமம்பற்றி நிகழாமையானும் ஒருவனோ டொருத்தியை எதிர்நிறீஇ அவருடம்பாட்டோடு புணர்
|