திலங்கு மருவித்தே வானின் இலங்கு மருவித்தே தானுற்ற சூள்பேணான் பொய்த்தான் மலை” (கலி.41) எனத் தோழி இயற்பழித்த வாய்பாட்டான் வரைவு கடாவ அதனை உடம்பட்டுப் பழித்தற்கு உடம்படா தாள்,
“பொய்த்தற் குரியனோ பொய்த்தற் குரியனோ அஞ்சலோம் பென்றாரைப் பொய்த்தற் குரியனோ குன்றக னன்னாடன் வாய்மையிற் பொய்தோன்றின் திங்களுட் டீத்தோன்றி யற்று” (கலி.41)
எனத் தலைவி இயற்பட மொழிந்து எதிர்மறுத்தவாறு காண்க.
“அருவி வேங்கைப் பெருவரை நாடற் கியானெவன் செய்கோ வென்றி யானது நகையென வுணரே னாயின் என்னா குவைகொல் நன்னுத னீயே.” (குறுந்.96)
இதுவும் இயற்பழித்த தோழிக்குத் தலைவி இயற்பட மொழிந்தது.
வரைவு உடன்படுதலும் - தலைவற்குத்
தலைவிதமர் வரை வுடம்பட்டதனைத்
தலைவி விரும்புதலையும்: உ-ம்:
“இலையமர் தண்குளவி யேய்ந்த பொதும்பில் குலையுடைக் காந்தள் இனவண் டிமிரும் மலையக நாடனும் வந்தான்மற் றன்னை அலையு மலைபோயிற் றின்று.” (ஐந்திணை.எழு.3)
“ஒறுப்ப வோவலர் மறுப்பத் தேறலர் தமிய ருறங்குங் கௌவை யின்றாய் இனியது கேட்டின் புறுகவிவ் வூரே முனாஅ, தியானையங் குருகின் கானலம் பெருந்தோடு அட்ட மள்ளர் ஆர்ப்பிசை வெரூஉம் குட்டுவன் மாந்தை அன்னவெங் குழைவிளங் காய்நுதற் கிழவனு மவனே.”
(குறுந்.34)
தமரான் ஒறுக்கப்பட்டு ஓவாராய்த் துயருழத்தல் ஆகாதென ஆற்றுவிக்குஞ் சொற்களான் மறுத்துரைப்பவுந் தேறாராய்த் தனித்து இருப்பார் உறக்கம் காரணமாக எழுந்த கௌவை கேளாது வரைந் தெய்திய மாற்றங் கேட்டு இவ்வூரும் இன்புறுக என்பதாம்.
ஆங்கதன்
புறத்துப் புரைபட வந்த மறுத்தலொடு தொகைஇ அவன் வரைவு வேண்டினவிடத்து அவ்வரைவு புறத்ததாகியவழித் தலைவி தன்னுயர்பு உண்டாகத் தோன்றியது மறுத்தலோடே முற்கூறியவற்றைத் தொகுத்து.
‘அதன்புறம்’ எனவே அதற்கு அயலாகிய நொதுமலர் வரைவாயிற்று. தலைவி தன் குடிப்பிறப்புங் கற்பும் முதலிய உயர்ச்சிக்கு ஏற்ப அதனை மறுத்துத் தலைவன் வரையுமாறு நீ கூறெனத் தோழிக்குக் கூறுமென்றற்குப், ‘புரைபட வந்த மறுத்தல்’ என்றார்.
“வாரி நெறிப்பட் டிரும்புறந் தாஅழ்ந்த வோரிப் புதல்வ னழுதன னென்பவோ புதுவ மலர்தைஇ யெமரென் பெயரால் வதுவை
|