|
யயர்வாரைக் கண்டு மதியறியா வேழையை யென்றகல நக்குவந் தீயாய்நீ தோழி யவனுழைச் சென்று; சென்றியா னறிவேன் கூறுக மற்றினி; சொல்லறியாப் பேதை மடவைமற் றெல்லா நினக்கொரூஉ மற்றென் றகலகலு நீடின்று நினக்கு வருவதாக் காண்பா யனைத்தாகச் சொல்லிய சொல்லும் வியங்கொளக் கூறு; தருமணற் றாழப்பெய் தில்பூவ லூட்டி யெருமைப் பெடையோ டெமரீங் கயரும் பெருமண மெல்லாந் தனித்தே யொழிய வரிமணன் முன்றுறைச் சிற்றில் புனைந்த திருநுதல் ஆயத்தார் தம்முட் புணர்ந்த வொருமணந் தானறியு மாயின் எனைத்தும் தெருமரல் கைவிட் டிருக்கோ வலர்ந்த விரிநீ ருடுக்கை உலகம் பெறினும் அருநெறி யாயர் மகளிர்க்கு இருமணங் கூடுத லில்லியல் பன்றே” (கலி.114)
என வரும்.
“மள்ளர் குழீஇய விழவி னானும்” (குறுந்.31)
என்பதுமாம். இச்சூத்திரத்து உருபும் எச்சமுமாயவற்றைக் ‘கிழவோண் மேன’ என்பதனொடு முடித்து, முற்றிற்குக் கிளவியென ஒரு பெயர் வெளிப்படுத்து முடிக்க. புல்லிய எதிரையும் உடன்படுதலையும் மறுத்தலுட் தொகுத்து. கிழவோள் மேன என்மனார் புலவர்
- தலைவியிடத்தன கிளவியென்று கூறுவர் புலவர் என்றவாறு.
(16)
காமப்புணர்ச்சிக்கண்நாணுமடனும் குறிப்பினுமிடத்தினும் வருமெனல்
|