இது கருமநிகழ்ச்சிக்கண் வரும் நாணும்
மடனுந் தந்தன்மை திரிந்துவரு மென்கின்றது.
(இ-ள்.)
சொல்லாக் காமம் இன்மையின் - கரும நிகழ்ச்சி யிடத்துக் கூற்று நிகழாத காமம் புலனெறி வழக்கின்கணின்மையின்; இரண்டும் ஏமுற நாட்டம் உளவென மொழிப - முற்கூறிய நாணும் மடனுந் தந்தன்மை திரிந்துவர நாட்டுதல் உளவென்று கூறுவர் புலவர்
எ-று.
என்றது,
தோழியிற் கூட்டத்துத் தலைவி
கூற்று நிகழ்த்துவ ளென்பதூஉம், நிகழுங்கால்
நாணும் மடனும் பெரும்பான்மை கெட்டு அக்கூற்று நிகழுமென்பதூஉம், அங்ஙனங்கெடுதலையும் முந்துநூற்கண் ஆசிரியர் நாட்டுதல் உளவென்பதூஉங் கூறியவாறாயிற்று.
“தேரே முற்றன்று நின்னினும் பெரிதே”
(கலி.74)
“பேரேமுற் றாய்போல முன்னின்று விலக்குவாய்” (கலி.114)
என்றாற் போல்வன மயக்கம் உணர்த்திற்று.
இனி நாணும் மடனுங்கெட்ட கூற்றுத் தோழியை நோக்கிக் கூறுமென மேற்கூறுகின்றான்.
(18)
நாணும் மடனும்பெரும்பாலும் நிகழாத கூற்றுத் தலைவி தோழிக்குக் கூறுமெனல்
|