நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3485
Zoom In NormalZoom Out


 

கொள்ளாக் காலையும்
மனைப்பட்டுக் கலங்கிச் சிதைந்தவழித் தோழிக்கு
நினைத்தல் சான்ற அருமறை யுயிர்த்தலும்
உயிராக் காலத் துயிர்த்தலும் உயிர்செல
வேற்றுவரைவு வரினது மாற்றுதற் கண்ணும்
நெறிபடுநாட்டத்து நிகழ்ந்தவை மறைப்பினும்
பொறியின் யாத்த புணர்ச்சி நோக்கி
ஒருமைக் கேண்மையி னுறுகுறை தெளிந்தோள்
அருமை சான்ற நாலிரண்டு வகையின்
பெருமை சான்ற வியல்பின் கண்ணும்
பொய்தலை யடுத்த மடலின் கண்ணும்
கையறு தோழி கண்ணீர் துடைப்பினும்
வெறியாட் டிடத்து வெருவின் கண்ணும்
குறியி னொப்புமை மருடற் கண்ணும்
வரைவுதலை வரினும் களவறி வுறினும்
தமர்தற் காத்த காரண மருங்கினும்
தன்குறி தள்ளிய தெருளாக் காலை
வந்தனன் பெயர்ந்த வறுங்கள நோக்கித்
தன்பிழைப் பாகத் தழீஇத் தேறலும்
வழுவின்று நிலைஇய வியற்படு பொருளினும்
பொழுது மாறும் புரைவ தன்மையின்
அழிவுதலை வந்த சிந்தைக் கண்ணும்
காமஞ் சிறப்பினும் அவனளி சிறப்பினும்
ஏமஞ் சான்ற உவகைக் கண்ணும்
தன்வயின் உரிமையும் அவன்வயிற் பரத்தையும்
அன்னவு முளவே யோரிடத் தான.
 

இதனுள்      தலைவிகூற்று   நிகழ்த்துமாறு  கூறுகின்றான்.  சில
கூற்றுக்களுள்  தன்வயின்  உரிமையும்  அவன்வயிற் பரத்தையும் பட
நிகழ்த்தவும்     பெறுமென்கின்றான்.     ‘அவன்வயின்’    எனவே
‘தன்’னென்றது  தலைவியையாம்;  உரிமை  -  களவிலே  கற்புக்கடம்
பூண்டொழுகல்;     எனவே,     புலவியுள்ளத்தாளாகவும்    பெறுங்
களவினென்பது    கருதிப்    பரத்தையுமுள   என்றான்;   ஊடலும்
உணர்த்தலும்   வெளிப்பட  நிகழாமையின்  இவை  புலவிப்  போலி.
பரத்தை   -   அயன்மை.   அவன்கட்   பரத்தை  மையின்றேனும்
காதன்மிகுதியான்   அங்ஙனங்   கருதுதல்   பெண்தன்மை,  உம்மை
எதிர்மறையாகலின் இவ்விரண்டும் இலவாதலே பெரும்பான்மை.

(இ-ள்.)    மறைந்து  அவற்  காண்டல்  -  தலைவன்  புணர்ந்து
நீங்குங்கால் தன் காதன்மிகுதியான் அவன் மறையுந்துணையும் நோக்கி
நின்று   அங்ஙனம்  மறைந்தவனைக்  காண்டற்கண்ணுந்  தோழிக்குக்
கூற்றாற் கூறுதலுள:

உ-ம்:

“கழிப்பூக் குற்றும் கானல் அல்கியும்
வண்டற்