பாவை வரிமண லயர்ந்தும் இன்புறப் புணர்ந்து மிளிவரப் பணிந்தும் தன்றுயர் வெளிப்படத் தவறி நந்துயர் அறியா மையி னயர்ந்த நெஞ்சமொடு செல்லு மன்னோ மெல்லம் புலம்பன் செல்வோன் பெயர்புறத் திரங்கி முன்னின்று தகைஇய சென்றவெ னிறையி னெஞ்சம் எய்தின்று கொல்லோ தானே யெய்தியும் காமஞ் செப்ப நாணின்று கொல்லோ உதுவ காணவர் ஊர்ந்த தேரே குப்பை வெண்மணற் குவவுமிசை யானும் எக்கர்த் தாழை மடல்வயி னானும் ஆய்கொடிப் பாசடும் பரியவூர் பிழிபு சிறுகுடிப் பரதவர் பெருங்கடன் மடுத்த கடுஞ்செலற் கொடுந்திமில் போல நிவந்துபடு தோற்றமொ டிகந்துமா யும்மே.” (அகம்.330)
‘அறியாமையின் அயர்ந்த நெஞ்சமொடு’ என்பது தன்வயினுரிமை; ‘இகந்து மாயும்’ என்பது அவன்வயிற் பரத்தைமை.
தற்காட்டுறுதல் - தன்னை அவன் காணாவகை நாணான் மறைந்து ஒழுகினுந் தன் பொலிவழிவினை அவற்குக் காட்டல் வேண்டுதற் கண்ணும்: அது,
“இன்ன ளாயினள் நன்னுத லென்றவர்த் துன்னச் சென்று செப்புநர்ப் பெறினே நன்றுமன் வாழி தோழிநம் படப்பை நீர்வார் பைம்புதற் கலித்த மாரிப் பீரத் தலர்சில கொண்டே.” (குறுந்.93)
‘இன்னளாயின’ளென்றது தற்காட்டுறுதல், ‘செப்புநர்ப் பெறினே’ யென்பதனாற் களவாயிற்று; கற்பிற்கு வாயில்கள் செப்புவார் உளராதலின், இதற்கு இரண்டும் உள.
நிறைந்த காதலிற் சொல் எதிர்மழுங்கல் - தலைவி காதல் மிகுதியான் தலைவன் பரத்தைமையை எதிர்கூற நினைந்து கூற்றெய்தாது குறைபடுதற்கண்ணும். உ-ம்:
“பிறைவனப் பிறந்த நுதலும் யாழநின் இறைவரை நில்லா வளையு மறையாது ஊரலர் தூற்றுங் கௌவையு முள்ளி நாண்விட்டுரையவற் குரையா மாயினு மிரை வேட்டுக் கடுஞ்சூல் வயவொடு கானலெய் தாது கழனி யொழிந்த கொடுவாய்ப் பேடைக்கு முடமுதிர் நாரை கடன்மீ னொய்யு மெல்லம் புலம்பற் கண்டுநிலை செல்லாக் கரப்பவுங் காப்பவுங் கைம்மிக் குரைத்த தோழி யுண் கணீரே.” (நற்.263)
இது ‘யாம் உரையாமாயினுங்கண் உரைத்தன’ என்றலின் இரண்டுங் கூறினாள்.
வழிபாடு மறுத்தல் - வருத்தமிகுதியாற் தலைவனை வழிபடுதலை மறுத்துக் கூறுமிடத்தும்: உ-ம்:
“என்ன ராயினு மினிநினை வொழிக வன்ன வாக வுரையல் தோழியாம் இன்ன மாகநத் துறந்தோர் நட்பெவன் மரனா ருடுக்கை மலையுறை
|