நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3492
Zoom In NormalZoom Out


ழ்கடற் றண்சேர்ப்பன் தாரகலம் நல்குமேல்
ஆழியாற் காணாமோ யாம்”  `      
(ஐந்திணை ஐம்.4)

என வரும்.

பெற்றவழி  மலியினும்  -   தலைவி  இடையீடின்றித்  தலைவனை
எதிர்ப்படப் பெற்றஞான்று புதுவது மலியினும்:

வரைவு     நீட்டித்த காலத்துப் பெற்றவழி மலிவை வெளிப்படக்
கூறுதலும்,  வரைவு  நீட்டியாதவழிப் பெற்றவழி மலிவை வெளிப்படுத்
தாமையும் உணர்க.

உ-ம்:

“இன்னிசை உருமொடு கனைதுளி தலைஇ
மன்னுயிர் மடிந்த பானாட் கங்குல்
காடுதேர் வேட்டத்து விளிவிடம் பெறாஅது
வரியதள் படுத்த சேக்கைத் தெரியிழைத்
தேனாறு கதுப்பின் கொடிச்சியர் தந்தை
கூதிரிற் செறியுங் குன்ற நாட
வனைந்துவர லிளமுலை ஞெமுங்கப் பல்லூழ்
விளங்குதொடி முன்கை வளைந்துபுறஞ் சுற்ற
நின்மார் படைதலின் இனிதா கின்றே
நும்மில் புலம்பினும் உள்ளுதொறு நலியும்
தண்வரல் அசைஇய பண்பில் வாடை
பதம்பெறு கல்லாது இடம்பார்த்து நீடிய
மனைமர மொசிய வொற்றிப்
பலர்மடி கங்குல் நெடும்புற நிலையே.”
       (அகம்.58)

முயக்கம் இனிதென   மகிழ்ந்து  கூறுவாள்   நும்மில்  புலம்பான்
வாடைக்கு வருந்தினே மென்றலின் இரண்டுங் கூறினாள்.

“அம்ம வாழி தோழி நலமிக
நல்ல வாயின அளியமென் றோள்கள்
மல்ல லிருங்கழி மல்கும்
மெல்லம் புலம்பன் வந்த மாறே.”
         (ஐங்குறு.120)

“அம்ம வாழி தோழி பன்மாண்
நுண்மண லடைகரை நம்மோ டாடிய
தண்ணந் துறைவன் மறைஇ
அன்னை யருங்கடி வந்துநின் றோனே”
     (ஐங்குறு.115)

இவை     தோழிக்குக்கூறியன. ‘பெற்றவழி மலியினும்’ எனப் பெறு
பொருள்  இன்னதெனவும்  இன்னார்க்குக்  கூறுவதெனவும் வரையாது
கூறவே, பிற பெற்று மலிந்து பிறர்க்குக் கூறுவனவுங் கொள்க.

“அம்ம வாழி தோழி யன்னைக்
குயர்நிலை யுலகமுஞ் சிறிதால் அவர்மலை
மாலைப் பெய்த மணங்கம ழுந்தியொடு
காலைவந்த முழுமுதல் காந்தள்
மெல்லிலை குழைய முயங்கலும்
இல்லுய்த்து நடுதலுங் கடியா தோட்கே.”
      (குறுந்.361)

இது பெற்றவழி மகிழ்ந்து தோழிக்கு உரைத்தது. இதற்கும் இரண்டுங்
கூறினாள்.

வரும்     தொழிற்கு  அருமை  வாயில்  கூறினும்  -  தலைவன்
இடைவிடாது   வருதற்கு,   ஆண்டு  நிகழும்  ஏதம்  பலவாற்றானும்
உளதாம்  அருமையை,  வாயிலாகிய  தோழி  கூறினுந்  தலைவிக்குக்
கூற்று நிகழ்தலுள;

அது,

“நள்ளென் றன்றே யாமம் சொல்ல