நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3506
Zoom In NormalZoom Out


கானக் குறவர் மடமகள்
ஏனல் காவ லாயின ளெனவே.”
              (நற்.102)

எனவும்,

“ஓங்கல் இறுவரைமேற் காந்தள் கடிகவினப்
பாம்பென வோடி யுருமிடித்துக் கண்டிரங்கும்
பூங்குன்ற நாடன் புணர்ந்தவந் நாட்போலான்
நீங்கும் நெகிழ்ந்த வளை.”
             (திணை.ஐம்.3)

எனவும்,

“மன்றப் பலவின் சுளைவிளை தீம்பழம்
உண்டுவந்துமந்தி முலைவருடக் - கன்றமர்ந்து
ஆமா சுரக்கும் அணிமலை நாடனை
யாமாப் பிரிவ திலம்.” 
             (ஐந்திணை எழு.4)

“அவருடை நாட்ட வாயினு மவர்போற்
பிரிதல்தேற்றாப் பேரன் பினவே
உவக்கா ணென்று முள்ளுவ போலச்
செந்தார்ச் சிறுபெடை தழீஇப்
பைங்குர லேனற் படர்தருங் கிளியே.”

இது  பகற்குறிக்கண்  தலைவனீட ஆற்றாது தோழிக்குக் கூறியது. (20)

தலைவிகூற்று இன்னவாறுமாமெனல்
 

110. வரைவிடை வைத்த காலத்து வருந்தினும்
வரையா நாளிடை வந்தோன் முட்டினும்
உரையெனத் தோழிக் குரைத்தற் கண்ணுந்
தானே கூறுங் காலமும் உளவே.
 

இதுவும் அதிகாரத்தன் தலைவிகூற்று இன்னவாறுமாம் என்கின்றது.

(இ-ள்.)    வரைவிடைவைத்த  காலத்து  வருந்தினும்  -  வரைவு
மாட்சிமைப்     படாநிற்கவும்     பொருள்காரணத்தான்     அதற்கு
இடையீடாகத்  தலைவன்  நீக்கி  வைத்துப் பிரிந்த காலத்துத் தலைவி
வருத்த மெய்தினும்:

ஆண்டுத்     தோழி   வினவாமலும்தானே   கூறுமென்றான்,
ஆற்றுவித்துப்   பிரிதல்  களவிற்குப்  பெரும்பான்மை  இன்மையின்.
வைத்த   வென்றது   நீக்கப்பொருட்டு.   வருந்துதல்   ஆற்றுவிப்பா
ரின்மையின் வருத்தமிகுதலாம் .

வரையா     நாளிடை வந்தோன் முட்டினும் - வரையா தொழுகுந்
தலைவன் ஒருஞான்று தோழியையானும் ஆயத்தையானுஞ் செவிலியை
யானுங் கதுமென எதிர்ப்பினும்:

உரையெனத்     தோழிக்கு  உரைத்தற்கண்ணும்  -  நொதுமலர்
வரைவிற்கு   மணமுரசியம்பியவழியானும்  பிறாண்டானுந்  தோழிக்கு
இன்னவாறு  கூட்டம்  நிகழ்ந்ததெனக்கூறி  அதனை நமரறியக் கூறல்
வேண்டுமென்றுந்     தலைவற்கு    நம்    வருத்தமறியக்    கூறல்
வேண்டுமென்றுங் கூறுதற்கண்ணும்; தானே கூறும் காலமும் உளவே -
இம்மூன்று  பகுதியினுந்  தோழி  வினாவாமல் தலைவி தானே கூறுங்
காலமும் உள எ-று.

உம்மையான் தோழி வினவிய இடத்துக் கூறலே வலியுடைத்து.

உ-ம்:

“அரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கை