நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3507
Zoom In NormalZoom Out


மேக்கெழு பெருஞ்சினை யிருந்த தோகை
பூக்கொய் மகளிரிற் றோன்று நாடன்
தகாஅன் போலத் தான்தீது மொழியினுந்
தன்கண் கண்டது பொய்க்குவ தன்றே
முத்துநிரை யொத்த முள்ளெயிற்றுத் துவர்வாய்
வரையாடு வன்பறழ்த் தந்தைக்
கடுவனு மறியுமக் கொடியோ னையே.”
        (குறுந்.26)

“யாரு மில்லைத் தானே களவன்
தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ
தினைத்தா ளன்ன சிறுபசுங் கால
ஒழுகுநீ ராரல் பார்க்குங்
குருகு முண்டுதா மணந்த ஞான்றே.”
         (குறுந்.25)

இவற்றுள்    துறந்தான்போலவும் மறந்தான் போலவுங் கருதித்தான்
தீது  மொழியினு   மெனவும்  யானெவன்  செய்கோ வெனவுந் தோழி
வினவாக்காலத்து    அவன்    தவற்றை   வரைவிடை   வைத்தலின்
ஆற்றாமைக்கு அறிவித்தாள்.

“பகலெரி சுடரின் மேனி சாயவும்
பாம்பூர் மதியி னுதலொளி கரப்பவும்
எனக்குநீ யுரையா யாயின் நினக்கியான்
உயிர்பகுத் தன்ன மாண்பினெ னாகலின்
அதுகண் டிசினால் யானே யென்றுநனி
அழுத லான்றிசின் ஆயிழை யொலிகுரல்
ஏனல் காவலி னிடையுற் றொருவன்
கண்ணியன் கழலன் தாரண் தண்ணெனச்
சிறுபுறங் கவையின னான வதற்கொண்டு
அஃதே நினைந்த நெஞ்சமோ
டிஃதா கின்றியா னுற்ற நோயே.”
              (நற்.128)

இது தோழி வினாவிய வழித் தலைவி கூறியது.

‘வரைவிடைவைத்த  காலத்து வருந்தினும்’ என்பதனைத் ‘தொகுத்த
மொழியான் வகுத்தனர்  கோடல்’
 (தொல்.பொ.666)  என்னுந் தந்திர
வுத்தியாகக் கொண்டு அதன்கண் வேறுபட வருவனவெல்லாங் கொள்க,

“உரைத்திசின் தோழியது புரைத்தோ வன்றே
அருந்துய ருழத்தலும் ஆற்றாம் அதன்றலைப்
பெரும்பிறி தாக லதனினு மஞ்சுதும்
அன்னோ இன்னும் நன்மலை நாடன்
பிரியா அன்பினர் இருவருமென்னும்
அலரதற் கஞ்சினன் கொல்லோ பலருடன்
துஞ்சூர் யாமத் தானுமென்
நெஞ்சத் தல்லது வரவறி யானே.”
           (குறுந்.302)

இது வரைவிடைக் கவன்ற தோழிக்குக் கூறியது.

“அதுகொல் தோழி காமநோயே
வதிகுருகு உறங்கும் இன்னிழற் புன்னை
உடைதிரைத் திவலை யரும்புந் தீநீர்
மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்
பல்லிதழ் உண்கண் பாடொல் லாவே.”
         (குறுந்.5)

என்னும் பாட்டும் அது.

“தோழி வாழி மேனாட் சாரற்
கொடியோர் குன்றம் பனிப்ப நெடிதுநின்று
புயறொடங் கின்றே பொய்யா வானம்
கனைவர லழிதுளி தலைஇ
வெம்முலை ஆகம் நனைக்குமெங் கண்ணே.”

இது வரைவிடைப் பருவங் கண்டு ஆற்றாது தோழிக்குக்