நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3509
Zoom In NormalZoom Out


பற்றி யம்புதெரிந்து
செருச்செய் யானை சென்னெறி வினாஅய்
புலர்குரல் ஏனற் புழையுடை யொருசிறை
மலர்தார் மார்பன் நின்றோற் கண்டோர்
பலர்தில் வாழி தோழி அவருள்
ஆரிருட் கங்குல் அணையொடு பொருந்தி
ஓரியா னாகுவ தெவன்கொல்
நீர்வார் கண்ணொடு நெகிழ்தோ ளேனே.”
    (அகம்.82)

அவனை     ஆயத்தார் பலருங் கண்டாரென வந்தோன் முட்டிய
வாறும் அவருள் நெகிழ்தோளேன் யானேயெனத் தானே கூறியவாறுங்
காண்க.

“தாழை குருகீனுந் தண்ணந் துறைவனை
மாழைமா னோக்கின் மடமொழி - நூழை
நுழையு மடமகன் யார்கொலென் றன்னை
புழையு மடைத்தாள் கதவு.”
            (கைந்நிலை.59)

“நகைநீ கேளாய் தோழி அல்கல்
வயநாய் எறிந்து வன்பறழ் தழீஇ
இளைய ரெய்துதன் மடக் கிளையோடு
நான்முலைப் பிணவல் சொலிய கானொழிந்
தரும்புழை முடுக்கர் ஆட்குறித்து நின்ற
தறுகட் பன்றி நோக்கிக் கானவன்
குறுகினன் தொடுத்த கூர்வாய்ப்பகழி
மடைசெலன் முன்பிற்றன் படைசெலச் செல்லா
தருவழி விலக்குமெம் பெருவிறல் போன்மென
எய்யாது பெயருங்குன்ற நாடன்
செறியரில் துடக்கலிற் பரீஇப் புரியவிழ்ந்து
ஏந்துகுவவு மொய்ம்பிற் பூச்சோர் மாலை
ஏற்றமில் கயிற்றின் எழில்வந்து துயல்வர
இல்வந்து நின்றோற் கண்டன ளன்னை
வல்லே யென்முக நோக்கி
நல்லை மன்னென நகூஉப்பெயர்ந் தோளே.”
  (அகம்.248)

இவை வந்தேன் செவிலியை எதிர்ந்துழிக் கூறியன.

“கொடியவுங் கோட்டவு நீரின்றி நிறம்பெறப்
பொடியழற் புறந்தந்த பூவாப்பூம் பொலங்கோதைத்
தொடிசெறி யாப்பமை யரிமுன்கை யணைத்தோளாய்
அடியுறை யருளாமை ஒத்ததோ நினக்கென்ன
நரந்தநா றிருங்கூந்தல் எஞ்சாது நனிபற்றிப்
பொலம்புனை மகரவாய் நுங்கிய சிகழிகை
நலம்பெறச் சுற்றிய குரலமை யொருகாழ்
விரன்முறை சுற்றி மோக்கலும் மோந்தனன்
நறாஅவவிழ்ந் தன்னவென் மெல்விரற் போதுகொண்டு
செறாஅச் செங்கண் புதைய வைத்துப்