சுதுமே கொடுப்பிற் கேளிடைக் கேடஞ் சுதுமே யாயிடை வாடுப கொல்லோ தாமே யவன்மலைப் போருடை வருடையும் பாயாச் சூருடை யடுக்கத்த கொயற்கருந் தழையே.”
(நற்.359) இதுவும் அது. “இலைசூழ்செங் காந்தள் எரிவாய் முகையவிழ்த்த வீர்ந்தண்
வாடை
கொலைவேல் நெடுங்கட் கொடிச்சி கதுப்புளருங் குன்ற
நாடன்
உலைவுடை வெந்நோ யுழக்குமால் அந்தோ முலையிடை நேர்பவர் நேரும் இடமிது மொய்குழலே.” “அவ்வளை வெரிநி னரக்கீர்த் தன்ன செவ்வரி யிதழ சேணாறு பிடவின் நறுந்தா தாடிய தும்பி பசுங்கேழ்ப் பொன்னுரை கல்லின் நன்னிறம் பெறூஉம் வளமலை நாடன் நெருநல் நம்மொடு கிளைமலி சிறுதினைக் கிளிகடிந் தசைஇச் சொல்லிடம் பெறாஅன் பெயர்ந்தனன் பெயர்ந்தது அல்லன் அன்றது காதலந் தோழி தாதுண் வேட்கையிற் போதுதெரிந் தூதா வண்டோ ரன்னவவன் தண்டாக் காட்சி கண்டுங் கழறொடி வலித்தவென் பண்பில் செய்தி நினைப்பா கின்றே.”
(நற்.25) “மாயோன்
அன்ன மால்வரைக் கவாஅன் வாலியோன் அன்ன
வயங்குவெள் அருவி அம்மலைக் கிழவோன்
நம்நயந் தென்றும் வருந்தின னென்பதோர்
வாய்ச்சொல் தேறாய் நீயும் கண்டு
நுமரொடும் எண்ணி அறிவறிந் தளவல் வேண்டு
மறுத்தரற் கரிய வாழி தோழி பெரியோர் நாடி
நட்பின் அல்லது நட்டு நாடார்தம்
ஒட்டியோர் திறத்தே.”
(நற்.32) “மறவல் வாழி தோழி துறைவர் கடல்புரை பெருங்கிளை நாப்பண் மடல்புனைந் தேறிநிற் பாடும் பொழுதே.” இன்னும் வேறுபட வருவனவெல்லாம் ஈண்டு அடக்கிக்
கொள்க. நன்னயம்
பெற்றுழி நயம்புரியிடத்தினும் - அங்ஙனந் தோழி கூறிய குறையினை அவள் அருளப் பெற்றவழி அதனைத் தலைவற்குக் கூறுதற்கு விரும்புமிடத்தும்: அவை தலைவனாற்றாமை கண்டு தோழி கையுறை யெதிர்தலும், இரவுக்குறியும் பகற்குறியும் நேர்தலுங், குறியிடங் காட்டலும், பிறவுமாம். உ-ம்: “பொன்மெலியும் மேனியாள் பூஞ்சுணங்கின் மென்முலைகள் என்மெலிய வீங்கினவே பாவமென் - றென்மெலிவிற் கண்கண்ணி வாடாமை யானல்ல வென்றுரைத்தால் உண்கண்ணி வாடா ளுடன்று.”
(திணை.நூற்.21) இதனுட் கண்கண்ணி - குறுங்கண்ணி. “நிலாவின் இலங்கு மணன்மலி மறுகிற் புலாலஞ் சேரிப் புல்வேய் குரம்பை ஊரென வுணராச் சிறுமையொடு நீருடுத் தின்னா
|