வுறையுட் டாயினு மின்பம் ஒருநா ளுறைந்திசி னோர்க்கும் வழிநாள் தம்பதி மறக்கும் பண்பி னெம்பதி வந்தனை சென்மோ வளைமேய் பரப்ப பொம்மற் படுதிரை கம்மென வுடைதரு மரனோங் கொருசிறைப் பலபா ராட்டி எல்லை யெம்மொடு கழிப்பி எல்லுற நற்றேர் பூட்டலு முரியி ரற்றன்று சேர்ந்தனிர் செல்குவி ராயின் யாமும் எம்வரை அளவையிற் பெட்குவம் நும்மொப் பதுவோ உரைத்திசி னெமக்கே”
(அகம்.200) “கடும்புலால் புன்னை கடியுந் துறைவ படும்புலாற் புட்கடிவான் புக்க - தடம்புலாந் தாழைமா ஞாழற் றதைந்து யார்ந்த தாழ்பொழில் ஏழைமா னோக்கி யிடம்”
(திணை.நூற்.44) என வரும். இன்னும் ‘நயம்புரியிடத்தும்’ என்றதனான் அவன் வரவினைத் தலைவிக்குக் கூறுதலுங் கொள்க. “இவர்பரி நெடுந்தேர் மணியும் இசைக்கும் பெயர்பட வியங்கிய விளையரு மொலிப்பர் கடலாடு வியலணிப் பொலிந்த நறுந்தழைத் திதலை யல்குல் நலம்பா ராட்டிய வருமே தோழி வார்மணற் சேர்ப்பன் நிறைபட வோங்கிய முழவுமுதற் புன்னை மரவரை மறைகம் வம்மதி பானாட் பூவிரி கானற் புணர்குறி வந்துநம் மெல்லிணர் நறும்பொழிற் காணா அல்ல லரும்படர் காண்கநாஞ் சிறிதே.”
(நற்.307) இது,
தோழி தலைவிக்குப் பகற்குறிக்கண் தலைவன் வருகின்றமை காட்டி அவன் வருத்தங் காண யாம் மறைந்து நிற்பாம் வம்மோ வெனக்கூறியது. எண்ணரும் பன்னகை கண்ணிய வகையினும் - தலைவன் இளிவந் தொழுகுதற்குப் பொறாத தோழி அவன் இளிவரவு உணர்த்துங் கருத்தின ளாய்ச் செயற்கையாக ஆராய்தற்கு அரியவாய் வரும் ஒன்றல்லாப் பல நகை குறித்த பகுதிக்கண்ணும்: அவை ‘என்னை மறைத்த லெவனாகியர்’ என்றலும், அறியாள் போறலுங், குறியாள் கூறலும், படைத்துமொழி கிளவியுங், குறிப்பு வேறு கொளலும், பிறவுமாம். உ-ம்: “நிறைத்திங்கள் சேர்ந்தோடு நீண்மலை நாட மறைக்கப் படாதேனை மன்னு - மறைத்துக்கொண் டோடினா யாதலா லொண்டொடியாள் தன்பக்கங் கூடக் கிடந்ததொன்றில்.” “மன்னோர்மன் சாய லவருண் மருடீர இன்னார்
|