நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3525
Zoom In NormalZoom Out


கண் என்ப தறியேனான் - மின்னூருங்
கார்கெழு தோன்றற் கணமலை நன்னாட
யார்கண்ண தாகுங் குறை.”

“தன்னெவ்வங் கூரினும் நீசெய்த வருளின்மை
என்னையு மறைத்தாளென் தோழி யதுகேட்டு
நின்னையான் பிறர்முன்னர்ப் பழிகூறல் தானாணி.”
 
                                       (கலி.44)

இது,   பழிகூறுவேனென்று  தலைவி குறியாததொன்றைத்   தோழி
கூறினது.

“விருந்தின ராதலின் வினவுதிர் அதனெதிர்
திருந்துமொழி மாற்றந் தருதலும் இயல்பெனக்
கூறுவ தம்மயான் ஊறுபல வருமென
அஞ்சுவன் வாழிய ரைய வெஞ்சா
தெண்ணில ரெண்ணியது முடிப்பர்
கண்ணிலர் கொடியரிவ டன்னை மாரே.”

இது, நிகழாது நிகழ்வதாகப் படைத்து மொழிந்தது.

“நெறிநீ ரிருங்கழி நீலமுஞ் சூடாள்
பொறிமாண் வரியலவ னாட்டலு மாட்டாள்
சிறுநுதல் வேரரும்பச் சிந்தியா நின்றாட்
கெறிநீர்த்தண் சேர்ப்பயா னென்சொல்லிச் செல்கோ.”

இது, குறிப்பு வேறு கொண்டாளென்றது.

புணர்ச்சி   வேண்டினும்   -   தலைவன்  பகற்குறியையும்  இரவுக்
குறியையும் விரும்பிக் கூறுமிடத்தும்:

தோழிமேன கிளவி. அவை பலவகைய.

உ-ம்:

“நன்னலஞ் சிதைய நாடொறும் புலம்பப்
பொன்னிணர் வேங்கை துறுகற் றாஅய்
இரும்பிடி வெரூஉ நாடற்கோர்
பெருங்க ணோட்டஞ் செய்தன்றோ விலமே.”

இது, தோழி தலைவியைப் பகற்குறி நயப்பித்தது.

“மாயவனுந் தம்முனும் போலே மறிகடலுங்
கானலுஞ்சேர் வெண்மணலுங் காணாயோ - கானல்
இடையெலா ஞாழலும் தாழையும் ஆர்ந்த
புடையெலாம் புன்னை புகன்று.”
         (திணை.நூற்.58)

“ஊர்க்கு மணித்தே பொய்கை பொய்கைக்குச்
சேய்த்து மன்றே சிறுகான் யாறே
இரைதேர் வெண்குரு கல்ல தியாவதுந்
துன்னல் போகின்றாற் பொழிலே யாமெங்
கூழைக் கெருமண் கொணர்கஞ் சேறும்
ஆண்டும் வருகுவள் பெரும்பே தையே.”
      (குறுந்.113)

இவை பகற்குறிநேர்ந்து இடங்காட்டின.

“செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த
செங்கோ லம்பின் செங்கோட் டியானைக்
கழறொடிச் சேஎய் குன்றங்
குருதிப் பூவின் குலைக்காந் தட்டே.”
           (குறுந்.1)

இது, தோழி தலைவியை இடத்துயர்த்து நீங்கியது.

“ஆர்கலி வெற்பன் மார்புபுணை யாகக்
கோடுயர் நெடுவரைக் கவாஅன் பகலே
பாடின் னருவி யாடுத லினிதே
நிரையிதழ் பொருந்தாக் கண்ணோ டிரவிற்
பஞ்சி வெண்டிரிச் செஞ்சுடர் நல்லிற்
பின்னுவீழ் சிறுபுறந் தழீஇ