ஞ்சமொடு நின்மாட்டு இவளு மினைய ளாயிற் றந்தை யருங்கடிக் காவலர் சோர்பத னொற்றிக் கங்குல் வருதலு முரியை பைம்புதல் வேங்கையு மொள்ளிணர் விரிந்தன நெடுவெண் டிங்களு மூர்கொண் டன்றே.”
(அகம்.2) ‘விலங்கும் எய்து நாட’ வென்று அந்நாட்டினை இறப்பக் கூறி இந்நாடுடைமையிற் ‘குறித்த இன்பம் நினக்கெவ னரிய’ வென வரைதல் வேண்டியவாறும், வேங்கை விரிந்ததனான் தினையறுத்தலின் இற்செறிப்புக் கூறியவாறுங், ‘கங்குல் வருதலும் உரியை’ யெனப் பகற்குறி மறுத்து இரவுக்குறி நேர்வாள்போற் கூறி ‘நெடுவெண்டிங்களு மூர்கொண்டன்றே’ யென்று அதனையும் மறுத்து வரைதற்கு நல்லநாளெனக் கூறி வரைவுகடாயவாறுங் காண்க. “காமங் கடவ வுள்ள மினைப்ப யாம்வந்து காண்பதோர் பருவ மாயின் ஓங்கித் தோன்று முயர்வரைக்கு யாங்கெனப் படுவது நும்மூர் தெய்யோ.”
(ஐங்குறு.237) இஃது ஊரை இறப்பக் கூறியது. “துணை புணர்ந் தெழுதரும்”
என்னும் நெய்தற்கலியுட், “கடிமலர்ப் புன்னைக்கீழ்க் காரிகை தோற்றாளைத் தொடிநெகிழ் தோளளாத் துறப்பாயான் மற்றுநின் குடிமைக்கட் பெரியதோர் குற்றமாய்க் கிடவாதோ; ஆய்மலர்ப் புன்னைக்கீ ழணிநலந் தோற்றாளை நோய்மலி நிலையளாத் துறப்பாயான் மற்றுநின் வாய்மைக்கட் பெரியதோர் வஞ்சமாய்க் கிடவாதோ; திகழ்மலர்ப் புன்னைக்கீழ்த் திருநலந் தோற்றாளை யிகழ்மலர்க் கண்ணளாத் துறப்பாயான் மற்றுநின் புகழ்மைக்கட் பெரியதோர் புகராகிக் கிடவாதோ”
(கலி.135) என இவை ஒழுக்கமும் வாய்மையும் புகழும் இறப்பக் கூறியன. குடிப்பிறந்தார்க்கு இம்மூன்றுஞ் சிறப்பக் கூறல் வேண்டும். ஏனைய வந்துழிக் காண்க. இன்னும் ‘அனைநிலைவகை’ என்றதனாலே தலைவி யாற்றாமை கண்டு வரைவுகடாவவோவென்று தலைவியைக் கேட்டலுஞ் சிறைப்புறமாகவுஞ் சிறைப்புறமன்றாகவுந் தலைவி யாற்றாமை கூறி வரைவுகடாவுவனவும் பிறவும் வேறுபட வருவனவும் இதனான் அமைக்க. “கழிபெருங் கிழமை கூறித் தோழி யொழியா யாயினொன் றுரைக்கோ தெய்ய” “கடவுணெற்றிய கருங்கால் வேங்கை தடவுநிலைப் பலவொடு தாழ்ந்த பாக்கத்துப் பின்னீ ரோதி யிவடமர்க் குரைப்பதோர் பெண்யாப் பாயினு மாக வொண்ணுதல் இலங்குவளை மென்றோட் கிழமை விலங்குமலை நாடநீ வேண்டுதி யெனினே.” “நிலவு மிருளும் போல நெடுங்கடற் கழியுங் கானலு மணந்தன்று நுதலுந் தோளும் அணிந்தன்றாற் பசப்பே.” எனவரும். ஐயச்
செய்கை தாய்க்கு எதிர்மறுத்துப் பொய் என மாற்றி மெய்வழிக் கொடுப்பினும் - தலைவிக்குக் கூட்டம் உண்டு
|