தடு களத்தின் முரசதிர்ந் தன்ன ஓங்கற் புணரி பாய்ந்தாடு மகளிர் அணிந்திடு பல்பூ மரீஇ யார்ந்த ஆபுலம் புகுதரு பேரிசை மாலைக் கடல்கெழு மாந்தை யன்னவெம் வேட்டனை யல்லையா னலந்தந்து சென்மே.”
(நற்.395) இது நலந்தொலைவுரைத்து வரைவுகடாயது. ஆங்கு அதன் தன்மையின் வன்புறை உளப்பட - அங்ஙனங் கடாவியவழி அவ்வரைந்து கோடன் மெய்யாயினமையின்வதுவை முடியுமளவும் ஆற்றுதற்கு வற்புறுத்துக் கூறுதல் உளப்பட: தன்மை
- மெய்ம்மை. எனவே, முன்பொய்ம்மையான வற்புறுத்தலும் பெற்றாம். உ-ம்: “நெய்கனி குறும்பூழ் காய மாக ஆர்பதம் பெறுக தோழி யத்தை பெருங்கன் னாடன் வரைந்தென வவனெதிர் நன்றோ மகனே யென்றனென் நன்றே போலு மென்றுரைத் தோனே.”
(குறுந்.389) இது, தலைவன் குற்றேவன்மகனான்
வரைவுமலிந்த தோழி
தலைவிக்குரைத்தது. “கூன்முண் முண்டகக் கூர்ம்பனி மாமலர் நூலறு முத்திற் காலொடு பாறித் துறைதொறும் வரிக்குந் தூமணற் சேர்ப்பனை யானுங் காதலென் யாயுநனி வெய்யள் எந்தையுங் கொடீஇயர் வேண்டும் அம்ப லூரு மவனொடு மொழிமே.”
(குறுந்.51) என வரும். “கொடிச்சி காக்கு மடுக்கற் பைந்தினை முந்துவிளை பெருங்குரல் கொண்ட மந்தி கல்லாக் கடுவனொடு நல்வரை யேறி அங்கை நிறைய ஞெமிடிக் கொண்டுதன் திரையணற் கொடுங்கவு ணிறைய முக்கி வான்பெய னனைந்த புறத்த நோன்பியர் தையூ ணிருக்கையிற் றோன்று நாடன் வந்தனன் வாழி தோழி யுலகங் கயங்க ணற்ற பைதரு காலைப் பீளொடு திரங்கிய நெல்லிற்கு நள்ளென் யாமத்து மழைபொழிந் தாங்கே.”
(நற்.22) இதனுள்,
தினைவிளைகாலம் வதுவைக் காலமாயினும் வம்ப மாரி இடையிடுதலான அன்று யான்கூறிய வரைவு பொய்த்தனரேனும் இன்று மெய்யாகவே வந்தனரென்றாள். “உரவுத்திரை பொருத பிணர்படு தடவுமுதல் அரவுவாள் வாய முள்ளிலைத் தாழை பொன்னேர் தாதிற் புன்னையொடு கமழும் பல்பூங் கானற் பகற்குறி வந்துநம் மெய்கவின் சிதையப் பெயர்ந்தன னாயினுங் குன்றிற் றோன்றுங் குவவுமண லேறிக் க
|