பறிந்த தோழி அவட்குக் கூறியது. “அன்னை வாழிவேண் டன்னை புன்னையொடு ஞாழல் பூக்குந் தண்ணந் துறைவன் இவட்கமைந் தனனாற் றானே தனக்கமைந் தன்றிவண் மாமைக் கவினே.
(ஐங்குறு.103) இது, வதுவைநிகழாநின்றுழித் தாய்க்குக் காட்டித் தோழி கூறியது. “கன்னவி றோளான் கடிநாள் விலக்குதற் கென்னை பொருணினைந்தா ரேந்திழாய் - பின்னர் அமரேற்றுக் கொள்ளுமென் றஞ்சினே னஞ்சார் நமரேற்றுக் கொள்ளாத ஞான்று.” இது, சுற்றத்தார் பொருள்வேண்டி மறுத்தாரென்றது. “நொதும லாளர் கொள்ளா ரிவையே யெம்மொடு வந்து கடலாடு மகளிரும் நெய்தலம் பகைத்தழைப் பாவை புனையார் உடலகங் கொள்வோ ரின்மையிற் றொடலைக் குற்ற சிலபூ வினரே.”
(ஐங்குறு.187) இது கையுறை மறுத்தது. “அம்ம வாழி தோழி நம்மலை வரையா மிழியக் கோட னீடக் காதலர்ப் பிரிந்தோர் கையற நலியுந் தண்பனி வடந்தை யச்சிரம் முந்துவந் தனர்நங் காத லோரே.”
(ஐங்குறு.223) இது, வரைவிடைப் பிரிந்தோன்
குறித்த பருவத்திற்குமுன் வருகின்றமை யறிந்த தோழி தலைவிக்குக் கூறியது. (23) செவிலி கூற்று நிகழுமாறு கூறல்
|