று இரண்டற்குக் காணரங் கூறுதலின், இதற்குங்
குறிப்பு மிகுதலான் உணர்தலெனக்காரணங் கொடுத்தல் வேண்டுமென்றுணர்க. ‘நாற்றமுந் தோற்றமும்’ (தொல்.பொ.114) என்பதனுட் கூறியவாறன்றி முன்னுறவை இடைவைத்தார், அவ்விரண்டினான் உணருங்காலும் இக் குறிப்பான் உணரவேண்டு மென்றற்கு. இம் மூன்றும் முற்கூறினவேனும் ஒரோவொன்றாற் கூட்டமுணரின் தலைவியை நன்குமதித்திலளாவ ளென்றற்கு இம்மூன்றும் வேண்டுமென்று ஈண்டுக் கூறினார். உ-ம்: “கோனே ரெல்வளை தெளிர்ப்ப நின்போல் யானு மாடிக் காண்கோ தோழி.” இது
கூட்ட முணராதள்போல நாணிற்கு மாறாகாமாற் கூறலின், முன்னுறவுணர்தல். “நின்னின் விடாஅ நிழற்போற் றிரிதருவாய் என்னீ பெறாத திதென்.”
(கலி.61) இது குறையுற
வுணர்தல். “ஏனல் காவ லிவளு மல்லள்” என்பது அவன் வரவுணர்தல்.
(36) தோழி மதியுடம்படுத்தபின்னல்லது
தலைவனிரந்து பின்னில்லானெனல்
|