இது
முறையானே பகற்குறி உணர்த்துகின்றது. (இ-ள்)
அவள் அறிவு உணர வருவழி ஆன பகற்புணர்களனே - களஞ்சுட்டிய தலைவி அறிந்தவிடந் தலைவன் உணரும்படியாக வருவதோரிடத்து உண்டான பகற்புணருங் குறியிடத்தை; புறன் என மொழிப -
மதிற்புறத்தேயென்று கூறுவர் ஆசிரியர் எ-று. அறிவு:
ஆகுபெயர். உ-ம்: “புன்னையங் கானற்புணர்குறி வாய்த்த மின்னே ரோதியென் றோழிக்கு” எனவும், “பூவே புன்னையந் தண்பொழில் வாவே தெய்ய மணந்தனை செலற்கே.”
(அகம்.239) எனவும் வருவன பிறவுங் கொள்க.
(41) அல்லகுறிப்படுதலுந்
தோழிக்குரித்தெனல்
|