இது தலைவற்கு உரியதோர் இலக்கணங் கூறுகின்றது. (இ-ள்) ஓரையும் நாளுந்
துறந்த ஒழுக்கம் - தீய இராசியின் கண்ணுந் தீய நாளின்கண்ணுங் கூட்டத்தைத் துறந்த ஒழுக்கம்; கிழவோற்கு மறைந்த ஒழுக்கத்து இல்லை - தலைவற்குக் களவொழுக்கத்தின்கண் இல்லை; எனவே கற்பின்கணுண்டு எ-று. ஒழுக்கமாவது
சீலமாதலிற் சீலங்காரணத்தால் துறப்பன தீதாகிய இராசியும் நாளுமென்பது பெற்றாம். நாளாவது அவ்விராசி மண்டில முழுவதும். கிழத்தி துறந்த ஒழுக்கம் முந்நாளல்லதென (122) முற்கூறிற்று. இதனான் அன்பு மிகுதி கூறினார். இதற்குப் பிராயச்சித்தம்
அந்தணர் முதலிய மூவர்க்கும் உண்மை ‘வந்த குற்றம் வழிகெடவொழுகலும்’ (தொல்.பொ.146) எனக் கற்பியலிற்
கூறுப. (44) தலைவற்கு வழியருமை முதலியன இல்லையெனல்
|