படாமை வரைதல் - அக்களவு
வெளிப்படுவதன் முன்னர் வரைந்துகோடல்; என்று ஆ இரண்டு என்ப வரைதல் ஆறே - என்று கூறப்பட்ட அவ்விரண்டே என்று கூறுவர் ஆசிரியர் வரைந்து கொள்ளும் வழியை எ-று. “சேயுயர் வெற்பனும் வந்தனன் பூவெழில் உண்கணும் பொலிகமா இனியே.”
(கலி.39) இது வெளிப்பட்டபின் வரைவு
நிகழ்ந்தது. “கொல்லைப் புனத்த அகில்சுமந்து கற்பாய்ந்து வானின் அருவி ததும்பக் கவினிய நாட னயனுடைய னென்பதனான் நீப்பினும் வாடல் மறந்தன தோள்.”
(ஐந்திணை எழு.2) இது
வெளிப்படாமல் வரைவு நிகழ்ந்தது. “எம்மனை முந்துறத் தருமோ தன்மனை யுய்க்குமோ யாதவன் குறிப்பே”
(அகம்.195) என்றாற் போல்வன
வெளிப்படுவதன்முன்னர்க் கொண்டு தலைக் கழிந்துழிக் கொடுப்போரின்றியுங் கரணம்
நிகழ்ந்தமையின், அதுவும் வெளிப்படாமல்
வரைந்ததாம்.
(49) ஓதல், பகை, தூது
என்ற மூன்றினும் வரையாது பிரிதல் கிழவோற்
கில்லையெனல்
|