நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3568
Zoom In NormalZoom Out


ப்
பெற்றோர் பெட்கும் பிணையை ஆகென
நீரொடு சொரிந்த வீரிதழ் அலரி
பல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்க
வதுவை நன்மணங் கழிந்த பின்றைக்
கல்லென் சும்மையர் ஞெரேரெனப் புகுதந்து
பேரிற் கிழத்தி யாகெனத் தமர்தர
ஓரிற் கூடிய உடன்புணர் கங்குல்
கொடும்புறம் வளைஇக் கோடிக் கலிங்கத்
தொடுங்கினள் கிடந்த ஓர்புறந் தழீஇ
முயங்கல் விருப்பொடு முகம்புதை திறப்ப
அஞ்சினள் உயிர்த்த காலை யாழநின்
நெஞ்சம் படர்ந்தது எஞ்சா துரையென
இன்னகை யிருக்கைப் பின்யான் வினவலின்
செஞ்சூட் டொண்குழை வண்காது துயல்வர
அகமலி உவகையள் ஆகிமுக னிகுத்து
ஒய்யென விறைஞ்சி யோளே மாவின்
மடங்கொண் மதைஇய நோக்கின்
ஒடுங்கீர் ஓதி மாஅ யோளே.”
              (அகம்.86)

இதனுள்     வதுவைக்கு ஏற்ற கரணங்கள்  நிகழ்ந்தவாறும்  தமர்
கொடுத்தவாறும்  காண்க.  சுற்றஞ்  சூழ்ந்து  நிற்றலானுந் தமர் அறிய
மணவறைச்  சேறலானுங் களவாற் சுருங்கிநின்ற நாண்  சிறந்தமையான்
பின்னர்த்    தலைவன்   வினாவ   அவள்   மறுமொழி   கொடாது
நின்றமையைத்  தலைவன் தோழிக்குக் கூறியவாறு காண்க. இதனானே
இது களவின்வழி நிகழ்ந்த கற்பாயிற்று.                        (1)

உடன்போகியகாலத்துக் கொடுப்போரின்றியுங்
கரணம் நிகழுமெனல்
 

143. கொடுப்போர் இன்றியுங் கரணம் உண்டே
புணர்ந்துடன் போகிய காலை யான.
 

இஃது எய்தியதன்மேற் சிறப்புவிதி.

(இ-ள்)   கொடுப்போர்  இன்றியும்  கரணம் உண்டே - முற்கூறிய
கொடைக்குரிய   மரபினோர்   கொடுப்பக்  கோடலின்றியுங்  கரணம்
உண்டாகும்;  புணர்ந்து உடன் போகிய காலையான - புணர்ந்து உடன்
போகிய காலத்திடத்து எ-று.

இது  புணர்ந்து உடன்போயினார் ஆண்டுக் கொடுப்போ ரின்றியும்
வேள்வி யாசான் காட்டிய சடங்கின் வழியாற் கற்புப் பூண்டு வருவதும்
ஆமென்றவாறு. இனி  ஆண்டு  வரையாது  மீண்டுவந்து  கொடுப்பக்
கோடல் உளதேல் அது மேற்கூறிய தன்கண் அடங்கும். இனிப் போய
வழிக்  கற்புப்  பூண்டலே  கரணம் என்பாருமுளர். எனவே கற்பிற்குக்
கரணம் ஒருதலையாயிற்று.

“பறைபடப் பணிலம் ஆர்ப்ப இறைகொள்பு
தொன்மூ தாலத்துப் பொதியிற்