இது
முதலூழியில் வேளாளர்க்கு
உரியதோர் இலக்கணங் கூறுகின்றது. (இ-ள்)
மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம் - வேதநூல்தான் அந்தணர் அரசர் வணிக ரென்னும் மூவர்க்கும் உரியவாகக் கூறிய காரணம்; கீழோர்க்கு ஆகிய காலமும் உண்டு - அந்தணர் முதலியோர்க்கும் மகட் கொடைக்குரிய வேளாண் மாந்தர்க்குந் தந்திர மந்திர வகையான் உரித்தாகிய காலமும் உண்டு எ-று. எனவே,
முற்காலத்து நான்கு வருணத்தார்க்குங் கரணம்
ஒன்றாய் நிகழ்ந்தது என்பதாம். அஃது இரண்டாம் ஊழிதொடங்கி வேளாளர்க்குத் தவிர்ந்தது
என்பதூஉந் தலைச்சங்கத்தாரும் முதனூலாசிரியர் கூறிய முறையே கரணம் ஒன்றாகச் செய்யுள் செய்தார் என்பதூஉங் கூறியவாறாயிற்று. உதாரணம் இக்காலத்து இன்று.
(3) பொய்யும் வழுவுந் தோன்றியபின்
கரணங் கட்டப்பட்டதெனல்
|